AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பயணிகள் கனிவான கவனத்துக்கு.. இனி ரயில் கவுண்டரிலும் காப்பீடு உண்டு.. அமலானது புதிய விதி!

Train Tickets Travel Insurance : ரயில்வே கவுண்டர்களில் பெறப்படும் பயண சீட்டுகளில் பயண காப்பீடு பிரீமியம் முறை இன்ற முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .

பயணிகள் கனிவான கவனத்துக்கு.. இனி ரயில் கவுண்டரிலும் காப்பீடு உண்டு.. அமலானது புதிய விதி!
மாதிரி புகைப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 27 Oct 2026 14:39 PM IST

ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் பயண சீட்டுகளை வாங்கும் போது பயண காப்பீடு வாங்குபவர்களுக்கு ஒரு புதிய விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இதில் இன்று முதல் காப்பீட்டு பிரிமியம் உள்பட முழு டிக்கெட் தொகையும் டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும். காப்பீட்டு பிரீமியங்கள் இனி ரொக்கமாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஏற்கனவே, ஆன்லைன் டிக்கெட் களில் உள்ள இந்த வசதி, இனி கவுண்டர் டிக்கெட்டுகளை வாங்கும் பயணிகளுக்கும் கிடைக்கும். காப்பீட்டு பிரீமியத்தை ரொக்கமாக செலுத்த முடியாது என்று ரயில்வே வாரியம் தெளிவுபடுத்தி உள்ளது. தற்போது வரை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிகள் பயண காப்பீடு வாங்கும் வசதியை பெற்றிருந்தனர். தற்போது, இந்த வசதி பயண சீட்டு கவுண்டர்களில் டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து பயண காப்பீடு

கடந்த அக்டோபர் 6- ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து, ரயில்வே வாரியம் இந்த வசதியை கவுண்டர் பயண சீட்டுகளுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்தது. அதன்படி, ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு முறையில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. ரயில்வே வாரியம் கூறுகையில், ஒரு பயணி பயண சீட்டு வாங்கும்போது பயணக் காப்பீட்டை தேர்வு செய்தால் காப்பீட்டு பிரீமியத்தை பயண சீட்டு கட்டணத்துடன் சேர்த்து டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க: தனியார் வசம் செல்லும் சென்னை- கொல்கத்தா விமான நிலையம்? மத்திய அரசின் புது யோசனை!

காப்பீட்டு பிரீமியங்களை டிஜிட்டல் முறையில் செலுத்த ஏற்பாடு

இதன் மூலம் பயண காப்பீட்டை தேர்வு செய்யாவிட்டால், வழக்கமான பயண சீட்டு கட்டண விதிகள் பொருந்தும். இருப்பினும் காப்பீட்டை தேர்வு செய்தால் முழு தொகையையும் டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும். 5, 10, 20 மற்றும் 25 பைசா நாணயங்கள் இனி செல்லுபடியாக. எனவே, பயணம் சீட்டு கட்டணங்கள் மற்றும் காப்பீட்டு பிரிமியங்களை டிஜிட்டல் முறையில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாற்றம் கவுண்டர்களில் பணம் செலுத்தும் செயல்முறையே நெறிப்படுத்த உதவும் என்று ரயில்வே கூறியுள்ளது.

காப்பீட்டு பிரீமியம் ரத்து கட்டணங்களுடன் கழிக்கப்படும்

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் தேவையான மென்பொருள் மாற்றங்களை செய்து, தற்போது அந்த அமைப்பை சோதித்து வருகிறது. இந்த அமைப்பை செயல்படுத்துவதற்கான சி.ஆர்.ஐ.எஸ், ஐஆர்சிடிசி ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. மண்டல ரயில்வே களும் தனது பி.ஆர்.எஸ். டிக்கெட் கவுண்டர்களில் தேவையான ஆயத்த பணிகளை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு பயணி பயண சீட்டை ரத்து செய்தால், காப்பீட்டு பிரீமியத்தின் ஒரு பகுதி பொருந்தக்கூடிய ரத்து கட்டணங்களுடன் சேர்ந்து கழிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ரீல்ஸ் பதிவில் மூழ்கிய பெற்றோர்.. கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட குழந்தை.. அதிர்ச்சி காட்சி வைரல்!

Follow Us