AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கர்நாடக சட்டமன்றத்தில் குண்டு வெடிப்பு? சோஷியல் மீடியாவில் வைரலான வீடியோ.. பெங்களூர் போலீசார் எடுத்த நடவடிக்கை!

Karnataka Assembly Bomb Blast AI Video : கர்நாட மாநில அரசின் சட்டமன்ற கட்டடத்தில் வெடிகுண்டு வெடிப்பது போன்ற செயற்கை நுண்ணறிவு வீடியோவை தயார் செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்ட பீகார் புலம்பெயர் தொழிலாளியை பெங்களூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

கர்நாடக சட்டமன்றத்தில் குண்டு வெடிப்பு? சோஷியல் மீடியாவில் வைரலான வீடியோ.. பெங்களூர் போலீசார் எடுத்த நடவடிக்கை!
குண்டு வெடிப்பது போன்ற ஏஐ வீடியோ.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Oct 2026 18:15 PM IST

கர்நாடக மாநில அரசின் தலைமை இடமான விதான செளதாவில் குண்டு வெடிப்பு நிகழ்வது போன்ற செயற்கை நுண்ணறிவு வீடியோவை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளது. கர்நாடக அரசின் தலைமை இடமான விதான செளதாவில் குண்டு வெடிப்பது போல பீகார் புலம்பெயர் தொழிலாளி ஹஜ்ரத் அலி என்பவர் ஏ. ஐ. ( செயற்கை நுண்ணறிவு) மூலமாக வீடியோ தயார் செய்து அதனை தனது சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இது சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நிஜத்தில் குண்டு வெடிப்பது போன்ற தோரணையை ஏற்படுத்தி இருந்தது.

கர்நாடக சட்டமன்றத்தில் குண்டு வெடிப்பது போல

இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட புலம் பெயர் தொழிலாளி ஹஜ்ரத் அலி கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் தங்கி இருந்து தினக்கூலி அடிப்படையில் குழாய் பொருத்தனராக பணிபுரிந்து வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், கடந்த அக்டோபர் 20- ஆம் தேதி சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில் அந்த நபர் துப்பாக்கியின் விசையை இழுப்பது போல பாவனை செய்வதும், இதனைத் தொடர்ந்து விதான செளதா கட்டிடத்தை குண்டு வைத்து அழிப்பது போன்ற ஒரு வெடிப்பு சம்பவத்தை நடித்திருந்தார்.

மேலும் படிக்க: செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்.. தாயிடம் சிபிசிஐடி போலீசார் அதிரடி விசாரணை.. துப்பு துலங்குமா!

பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு

இந்த வீடியோ “ஜேஎன்எக்ஸ் கிங் ஹெச் ஜி- என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டதாகவும், அதில், பயனர் கட்டிடத்தை வெடிக்க செய்து விட்டதாக கூறும் ஒரு தலைப்புடன் இடம்பெற்று இருந்ததாகவும் கூறப்படுகிறது. போலியாக உருவாக்கப்பட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு பொதுமக்கள் பெங்களூரு காவல்துறையை குறிப்பிட்டு இதற்கு பொறுப்பான நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

பீகார் இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை

இதைத் தொடர்ந்து, அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது. உண்மையில் இது போன்ற எந்த குண்டுவெடிப்பு சம்பவமும் நிகழவில்லை என்றும், அந்த வீடியோ செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் காவல்துறை தெளிவுபடுத்தி உள்ளது. விதான செளதா என்பது கர்நாடக சட்டமன்றம் அமைந்துள்ள ஒரு உயர் பாதுகாப்பு அரசு கட்டிடம் ஆகும். கைது செய்யப்பட்டுள்ள ஹஸ்ரத் அலியின் நோக்கம் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: ரூ.15 லட்சத்தை பறிகொடுத்த கேரள மீன் வியாபாரி.. சிறை காவலர் உள்பட இருவரை தூக்கிய போலீஸ்.. கோவையில் பரபர சம்பவம்!

Follow Us