உங்கள் வீட்டில் இலவச மின்சாரம் வேண்டுமா? பிஎம் சூர்யா கர் திட்டத்தின் செலவு மற்றும் மானிய விபரங்கள்!
PM Surya Ghar Muft Bijli Yojana : பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் சோலார் பேனல்கள் அமைப்பது எப்படி, அதற்கு ஆகும் செலவுகள், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் உள்ளிட்ட முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மத்திய அரசின் திட்டங்களில் முக்கிய திட்டமான பி. எம். சூர்யா கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா திட்டமானது (Pradhan Mantri Surya Ghar Muft Bijli Yojana) அரசு மானிய உதவியுடன் வீடுகள் தோறும் சூரிய மின் அமைப்புகளை நிறுவ உதவுவதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக உறுதியளிக்கிறது. இந்த திட்டமானது 3 கிலோ வாட் வரையிலான அமைப்புகளை நிறுவும் வீடுகளின் நுகர்வோருக்கு ரூ. 78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது. கடந்த 2024- ஆம் ஆண்டு ஜனவரி 22- ஆம் தேதி பிரதான் மந்திரி சூர்ய கர் முஃப்ட் பிஜ்லி யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் வாயிலாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 10 மில்லியன் குடும்பங்களுக்கு கூரைமேல் சூரிய மின்சக்தி அமைப்புகள் வழங்கப்படும்.
ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை
பெரும்பாலான நடுத்தர குடும்பங்களை பொறுத்தவரை சூரிய ஆற்றல் பயனளிக்குமா என்பது இன்றி மாறாக எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும். அந்த செலவை மீட்டெடுக்க எவ்வளவு காலம் ஆகும் என்ற கேள்வி எழும். இந்த சூரிய மின்சக்தி அமைப்புகள் நிறுவக்கூடிய செலவானது சூரிய சக்தி அமைப்பின் அளவு மற்றும் பயன்படுத்தப்படும் உபகரணங்களின் வகையை பொறுத்து அமைகிறது. மானியத்திற்கு முன்பு இந்தியாவில் கூரையின் மேல் பொருத்தப்படும் சூரிய சக்தி அமைப்புகளுக்கு தற்போது, ஒரு கிலோ வாட்டுக்கு சுமார் ரூ. 60 ஆயிரம் முதல் ரூ. 80 ஆயிரம் வரை செலவாவதாக தொழில் துறை மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: இந்தியப் பெண்களின் வேலைவாய்ப்புப் புள்ளிவிவரங்கள் குறித்த உண்மையான நிலை என்ன? எண்கள் சொல்லும் நிஜக் கதை




பிரதமர் சூரிய கர் த்திட்டத்தின் கீழ் மாநில கட்டமைப்புகள் குறித்த விவரம்:
- 1 கிலோ வாட் அமைப்புக்கு ரூ. 30 ஆயிரம் வரை மானியம்.
- 2 கிலோ வாட் அமைப்புக்கு ரூ. 60 ஆயிரம் வரை மானியம்.
- 3 கிலோ வாட் அமைப்புக்கு ரூ. 78 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
- 3 கிலோ வாட்டுக்கு மேற்பட்ட அமைப்புகளுக்கு மொத்த மாநிலம் ரூ. 78 ஆயிரமாக உச்சவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
40 முதல் 60 சதவீதம் வரை அரசு மானியம்
அமைப்பின் அளவைப் பொறுத்து மானிய உதவியானது செலவில் 40 முதல் 60 சதவீதம் வரை ஈடு செய்யும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரிய அமைப்பு நிறுவுவது மற்றும் பரிசோதனைகளுக்கு பிறகு அரசின் மானியம் நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: குறையும் வேலையற்றோரின் எண்ணிக்கை.. வேலையின்மை விகிதப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் உள்ள உண்மை!