தமிழக முதல்வர் விஜய் கனகதுர்கை அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்!
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திப்பதற்காக ஒரு நாள் பயணமாக ஆந்திர மாநிலத்திற்குச் சென்ற தமிழக முதல்வர் விஜய், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கை அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். கோயிலுக்கு வந்த விஜய்க்கு நிர்வாகம் சார்பில் மேளதாளங்கள் முழங்க, பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கருவறையில் உள்ள கனகதுர்கை அம்மனைத் தரிசித்து வழிபட்டார். அர்ச்சகர்கள் அவருக்குத் திலகமிட்டு, சிறப்புப் பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினர். கோயில் நிர்வாகம் சார்பில் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

முன்னதாக, விஜயவாடா நவராத்திரி உற்சவத்தில் பங்கேற்குமாறு தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஒருவர் விஜய்க்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தப் பயணத்தின்போது, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் இரு மாநிலங்களுக்கு இடையேயான நீர்வளப் பிரச்சினைகள் குறித்தும் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் கனகதுர்கை அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம்!
நதிகள் இணைப்பு குறித்து ஆலோசிக்கவே வந்தேன் – முதல்வர் விஜய்..
வீடுகளுக்குள் படையெடுக்கும் பூச்சிகள்; நிம்மதி இழந்த கிராம மக்கள்
மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபர்கள்!