வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ பயணம் – யுபிஐ மூலம் டிக்கெட் எடுத்த பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11, 2026 இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக யுபிஐ மூலம் பணம் செலுத்திய பிரதமர் மோடி, டிக்கெட் பெற்று மெட்ரோவில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் விஜய் முன்னிலையில் பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11, 2026 இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.முன்னதாக விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்ற முதல்வர் விஜய் அவருக்கு மெட்ரோ ரயில் மாதிரியை நினைவு பரிசாக வழங்கினார். தொடக்க விழாவைத் தொடர்ந்து, இரு பெரும் தலைவர்களும் ஒரே மெட்ரோ ரயிலில் அமர்ந்து இணைந்து பயணம் செய்த நிகழ்வு, தமிழக அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. முன்னதாக மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கு முன்னதாக யுபிஐ மூலம் பணம் செலுத்திய பிரதமர் மோடி, டிக்கெட் பெற்று மெட்ரோவில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பயணத்தின் போது ரயிலில் பயணித்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் இரு தலைவர்களும் மிகவும் உற்சாகமாகக் கலந்துரையாடினர். அதனைத் தொடர்ந்து சென்னை ஐஐடியில் இசையமைப்பாளர் இளையராஜாவின் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
