Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
UPI

UPI

UPI (Unified Payments Interface) என்பது இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொபைல் கட்டண முறை ஆகும். NPCI (National Payment Corporation of India) எனப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் யுபிஐ திட்டத்தை அறிமுகம் செய்து அதனை செயல்படுத்தி வருகிறது. இந்த யுபிஐ அம்சம் மூலம் மொபைல் செயலியில் பல வங்கி கணக்குகளை இணைத்து மொபைல் எண், யுபிஐ ஐடி மூலம் வங்கி விவரங்களை பதிவிட்டு பணம் அனுப்பலாம். பணம் அனுப்புவது மட்டுமன்றி, வங்கி கணக்கு இருப்பு, வங்கி கணக்கில் இருந்து யார் யாருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது, யார் யாரிடம் இருந்து வங்கி கணக்கிற்கு பணம் வந்துள்ளது உள்ளிட்ட அனைத்தையும் இதில் தெரிந்துக் கொள்ள முடியும். வங்கிகளுக்கு சென்று படிவம் நிரப்பி பணம் செலுத்துவது மற்றும் பணத்தை பெறுவது, ஏடிஎம் சென்டரில் மற்றவர்கள் கணக்கிற்கு பணம் செலுத்துவது தொடர்பான நடைமுறையை இது மிகவும் எளிமையாக்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள யுபிஐ பயன்படுத்துகின்றனர். யுபிஐ தொடர்பான செய்திகளை நாம் காணலாம்.

Read More

UPI: தவறான எண்ணுக்கு பணம் அனுப்பிட்டீங்களா? எளிமையாக திரும்ப பெறுவது எப்படி?

Money Transfer Alert: யுபிஐ அல்லது வங்கிப் பரிவர்த்தனை செய்யும்போது தவறுதலாக பணம் அனுப்புவது பொதுவான பிரச்னையாக உள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் பணத்தைத் திரும்பப் பெற என்ன செய்ய வேண்டும்? உடனடியாக உங்கள் வங்கியை அழைக்க வேண்டுமா? என்பது போன்ற கேள்விகள் எழுவது இயல்பு.

UPI : யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்கிறீர்களா?.. வருகிறது புதிய ரூல்ஸ்.. என்ன தெரியுமா?

SMS For Transaction Under 100 May Stop | யுபிஐ பண பரிவர்த்தனை பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் ரூ.1-ல் இருந்து யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் தான் அது தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

UPI : 2026 முதல் யுபிஐ-ல் வரும் முக்கிய அம்சம்.. என்ன தெரியுமா?

New Feature Will be Introduce in UPI | பயனர்களின் நலன் கருதி இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பல புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், 2026-ல் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

UPI : யுபிஐ-ல் நவம்பர் 3 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன தெரியுமா?

UPI Payment Changes 2025 | இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ பண பரிவர்த்தனை செய்யும் நிலையில், பயனர்களின் நலனுக்கான அதில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் நவம்பர் 03, 2025 முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

UPI : இனி ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பண பரிவர்த்தனை செய்யலாம்.. வந்தது அதிரடி மாற்றங்கள்!

UPI Transaction Limits Increased | பயனர்களின் நலனுக்காக யுபிஐ-ல் அவ்வப்போது பல புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். அந்த வகையில் தற்போது யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வரம்புகளில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

UPI New Limit : யுபிஐ-ல் செப்டம்பர் 15 முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்.. இந்த வரம்புகள் எல்லாம் மாறுது!

UPI Transaction Limits Will Increase | இந்தியாவில் ஏராளமான பொதுமக்கள் அன்றாட பண பரிவர்த்தனை தேவைகளுக்காக யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், செப்டம்பர் 15, 2025 முதல் யுபிஐ பண பரிவர்த்தனை வரம்பில் முக்கிய மாற்றம் வர உள்ளது.

போன் பே, கூகுள் பே-க்கு போட்டியாக களமிறங்கும் பிஎஸ்என்எல்.. யுபிஐ சேவையை தொடங்க திட்டம்!

BSNL UPI Service | இந்தியாவில் ஏற்கனவே கூகுள் பே, போன்பே உள்ளிட்ட செயலிகள் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் நிறுவனம், பிஎஸ்என்எல் பே சேவையை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுபிஐயில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? திரும்ப பெறுவது எப்படி?

Banking Alert: இந்தியாவில் பணம் அனுப்பும் வேலையை யுபிஐ செயலிகள் மிகவும் எளிமையாக மாற்றிவிட்டன. ஒருவரின் யுபிஐ ஐடி தெரிந்தால் மட்டும் போதும் சில விநாடிகளில் பணம் அனுப்பலாம். ஆனால் அவற்றில் உள்ள சிக்கல் பணத்தை தவறாக அனுப்பும் வாய்ப்பும் இருக்கிறது.

இந்தியாவில் ரூ.90,000 கோடியாக உயர்ந்த தினசரி யுபிஐ பரிவர்த்தனை அளவு.. ஆய்வு கூறுவது என்ன?

India's New UPI Record | இந்தியாவில் பெரும்பாலான மக்கள் யுபிஐ சேவையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர். அதன்படி, ஜனவரி மாதத்தில் ரூ,75,000 கோடியாக இருந்த தினசரி பண பரிவர்த்தனை தற்போது ஆகஸ்ட் மாதத்தில் ரூ.90,000 கோடியாக அதிகரித்துள்ளதாக எஸ்பிஐ அறிக்கை கூறுகிறது.

அக்டோபர் 1 முதல் UPI-ல் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.. NPCI திட்டவட்டம்!

UPI Collect Request Feature | யுபிஐ செயலிகளில் Collect Request அம்சம் பயன்பாட்டில் இருந்த நிலையில், அக்டோபர் 1, 2025 முதல் அந்த அம்சம் ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஏராளமான மோசடி சம்பவங்கள் நடைபெறும் நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

UPI : யுபிஐ மூலம் பணம் பெறுவது எப்படி?.. சிம்பிள் & பாதுகாப்பான ஸ்டெப்ஸ் இதோ!

Receive UPI Payments via QR Code | யுபிஐ மூலம் பணம் அனுப்புவதை போல யுபிஐ மூலம் பணம் பெறும் வசதியும் உள்ளது. இந்த நிலையில், யுபிஐ செயலியில் கியூஆர் கோடு பயன்படுத்தி பணம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரகசிய எண் இல்லாமல் யுபிஐ பயன்பாடு.. புது அப்டேட்!

இந்தியாவில் யுபிஐ பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில், ஒவ்வொரு முறையும் உங்கள் 4 அல்லது 6 இலக்க பின்நம்பரை உள்ளிட வேண்டியது அவசியமாகிறது.இதனால், உங்கள் முக ஐடி மற்றும் பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தி, அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளையும் மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

UPI : யுபிஐ-ல் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

UPI Payment Changes | இந்தியாவை பொருத்தவரை கோடிக்கணக்கான பொதுமக்கள் யுபிஐ செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களுக்கு எளிதாக சேவையை வழங்கும் வகையில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் பல மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சில புதிய விதிகளை அறிமுகம் செய்துள்ளது.

UPI : யுபிஐ-ல் பயோமெட்ரிக் மூலம் பண பரிவர்த்தனை?.. விரைவில் அமலுக்கு வரும் புதிய அம்சம்?

Biometric in UPI Payments | இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ செயலிகளை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்ய பின் எண் பயன்படுத்தப்படும் நிலையில், விரைவில் கைரேகை மற்றும் முக அடையாள வசதிகள் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

UPI : இனி யுபிஐ பயன்படுத்த கட்டணம் செலுத்த வேண்டும்?.. ஆர்பிஐ கவர்னர் சொன்ன முக்கிய தகவல்!

UPI Charges in India | இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். சிறிய கிராமங்கள் முதல் பெரிய நகரங்கள் வரை என அனைத்து இடங்களிலும் யுபிஐ பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் யுபிஐ சேவைகளை பயன்படுத்த இந்தியாவில் கட்டணம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.