Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

யுபிஐயில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? திரும்ப பெறுவது எப்படி?

Banking Alert: இந்தியாவில் பணம் அனுப்பும் வேலையை யுபிஐ செயலிகள் மிகவும் எளிமையாக மாற்றிவிட்டன. ஒருவரின் யுபிஐ ஐடி தெரிந்தால் மட்டும் போதும் சில விநாடிகளில் பணம் அனுப்பலாம். ஆனால் அவற்றில் உள்ள சிக்கல் பணத்தை தவறாக அனுப்பும் வாய்ப்பும் இருக்கிறது.

யுபிஐயில் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா? திரும்ப பெறுவது எப்படி?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 Aug 2025 22:26 PM

முன்பு ஒருவருக்கு பணம் அனுப்பவும், அல்லது நம் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளில் (Bank) நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். ஆனால் யுபிஐ (UPI) செயலிகளின் வருகைக்கு பிறகு அந்த வேலைகள் மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. இது நம் நேரத்தை மிச்சப்படுத்தியிருக்கிறது. ஆனால் சில நேரங்களில் அவசர கதியில் செய்யும் பணப்பரிவர்த்தனைகள் நமக்கு சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக சில நேரங்களில் தவறான நம்பருக்கு பணம் அனுப்பி விடுவோம், அல்லது தவறான தொகையை குறிப்பிட்டு பணம் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி தவறான பணம் அனுப்பும்போது அதனை திரும்ப பெறுவது எப்படி என பலருக்கும் சந்தேகம் இருக்கும். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பரிவர்த்தனை விவரங்களை உடனடியாகச் சரிபார்க்கவும்

நீங்கள் தவறான எண் அல்லது கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பியிருந்தால், முதலில் நீங்கள் பயன்படுத்திய யுபிஜ செயலிக்கு சென்று பணம் என்த கணக்கிற்கு சென்றுள்ளது என்ற விவரங்களை சரி பார்க்கவும். பின்னர் .யுபிஐ செயலியின் வாடிக்கையாளர சேவை மையத்தை தொடர்பு கொண்டு அவர்களிடம் புகார் தெரிவிக்கவும். அவர்களிடம் பரிவர்த்தனை ஐடியைக் குறிப்பிட்டு அவர்களிடம் புகார் அளிக்கலாம். இதன் மூலம் யுபிஐ செயலியின் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் உங்கள் வங்கியைத் தொடர்பு கொண்டு உங்கள் பணத்தை மீட்டுத் தருவார்கள்.

இதையும் படிக்க  :  இந்தியாவில் ரூ.90,000 கோடியாக உயர்ந்த தினசரி யுபிஐ பரிவர்த்தனை அளவு.. ஆய்வு கூறுவது என்ன?

உங்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளவும்

யுபிஐ செயலிகள் மூலம் உங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் நேரடியாக உங்கள் வங்கி கிளைக்கு செல்லவும் அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை எண்ணை தொடர்பு கொள்ளவும். அவர்களிடம் நீங்கள் பணம் செலுத்திய பரிவர்த்தனை ஐடி மற்றும் தேதி போன்ற விவரங்களை வழங்கவும். தவறாக செலுத்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெற வங்கி, நீங்கள் பணம் அனுப்பிய நபருக்கு மெசேஜ் அனுப்பும்.

தேசிய கொடுப்பனவு கழகத்தில் புகார் தெரிவிக்கலாம்

யுபிஐ சேவைகளை வழங்கி வரும் மத்திய அரசின் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தில் புகார் தெரிவிக்கலாம். உங்களுக்கு வங்கி மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் தீர்வு கிடைக்கவில்லை என்றால் நீங்கள் NPCI இணையதளத்துக்கு செ்று புகார் அளிக்கலாம்.

இதையும் படிக்க : இ பான் கார்டு பதிவிறக்கம் செய்ய கூறி இமெயில் வந்ததா?.. தப்பி தவறி கூட திறந்துவிடாதீங்க!

தொகை அதிகம் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் தெரிவிக்கலாம். அவர்களிடம் நீங்கள் பணம் அனுப்பியதற்கான ஸ்கிரீன்ஷாட் பரிவர்த்தனை ஐடி போன்ற விவரங்களை வழங்க வேண்டும். அவர்கள் உடனடியாக செயல்பட்டு உங்கள் பணத்தை மீட்டு தருவார்கள்.

பணம் அனுப்புவதற்கு முன் எப்போதும் கணக்கு எண்/மொபைல் எண்ணை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும். QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது, ​​பெறுநரின் பெயர் சரியாக உள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். பணம் தவறுதலாக அனுப்பப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும். நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் பணத்தைத் திரும்பப் பெறுவதில் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.