சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி விட்டீர்களா?.. இந்த செயலிகள் உங்களுக்கு நிச்சயம் உதவி செய்யும்!
Social Media Addiction | தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், பலரும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். இந்த நிலையில், சமூக ஊடகங்களுக்கு அடிமையாகமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) காரணமாக தற்போதைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களது அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஸ்மார்ட்போன் மூலம் இணையதளத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் சமூக ஊடகங்களுக்கு அடிமைகளாகி விடுகின்றனர். இதன் காரணமாக ஒரு நாள் முழுவதும் அவர்கள் தங்களது நேரத்தை சமூக ஊடகங்களில் செலவிடுகின்றனர். இவ்வாறு சமூக ஊடகங்களுக்கு அடிமையாக உள்ளவர்களை, அதிலிருந்து மீட்க உதவும் சில செயலிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சமூக ஊடகங்களுக்கு அடிமையாவது ஏன் ஆபத்து?
சமூக ஊடகங்களுக்கு அடிமையாவது மனிதர்களின் வாழ்வில் பல ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதில் உள்ள சிக்கல்கள் குறித்து தெரியாத பொதுமக்கள் பலர், மணி கணக்காக சமூக ஊடகங்களில் மூழ்கி கிடக்கின்றன. இதன் காரணமாக மன ரீதியான மற்றும் உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போதும் மிகவும் கவனமாகவும், நாம் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்தும் செயல்பட வேண்டும்.
இதையும் படிங்க : ஏஐ உடன் 5 மாத காதல்… நிச்சயதார்த்தம் முடிந்தது – அதிர்ச்சியளித்த பெண்!




சமூக ஊடகங்களுக்கு அடிமையாகமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
சமூக ஊடகங்களுக்கு அடிமையாகமல் இருக்க சில கருவிகள் மற்றும் செயலிகளை பயன்படுத்தலாம்.
சமூக ஊடக பயன்பாட்டை கண்காணியுங்கள்
நீங்கள் ஒவ்வொரு முறை ஸ்மார்ட்போனில் செயலிகளை கிளியர் செய்யும்போதும் நீங்கள் எவ்வளவு நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்களில் இதற்கான சிறப்பு கருவிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி நீங்கள் எத்தனை மணி நேரம் எந்த எந்த செயலிகளில் பயன்படுத்தி உள்ளீர்கள் என்பதை கண்டுபிடித்துவிடலாம்.
செயலிகளை பயன்படுத்துங்கள்
உங்களின் சமூக ஊடக பயன்பாட்டை குறைப்பதற்கு சில செயலிகளை பயன்படுத்துங்கள். அவை உங்களை சமூக ஊடகங்களுக்கு அடிமைகளாகவிடாமல் தடுக்க வழிவகை செய்யும்.
Dumb Phone
இந்த செயலி உங்கள் ஸ்மார்ட்போனின் ஹோம் ஸ்கிரீனில் உள்ள அத்தியாவசியமற்ற செயலிகளை நீக்கிவிடும். இதன் மூலம் நீங்கள் தேவையற்ற செயலிகளை பயன்படுத்துவது தவிர்க்கப்படும்.
Opal
இந்த செயலி பயனர்களை சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதில் இருந்து தடுக்க தேவையற்ற செயலிகளை பிளாக் செய்துவிடும். இது ஒருவர் எத்தனை மணி நேரம் சமூக ஊடக செயலிகளில் நேரத்தை செலவிடுகிறார் என்பதை கணக்கிட்டு காட்டும்.
இதையும் படிங்க : யூடியூபில் குழந்தைகளைக் கண்டறியும் ஏஐ தொழில்நுட்பம் – எப்படி செயல்படும்?
Forest
இது சமூக ஊடக பயன்பாட்டை குறைக்க பயன்படுத்தப்படும் மிகவும் சுவாரஸ்யமான செயலி ஆகும். அதாவது நீங்கள் எவ்வளவு நேரம் மொபைல் போனை பார்க்காமல் இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் மொபைல் போனின் ஸ்கிரீனில் ஒரு மரம் வளரும். ஆனால், நீங்கள் மொபைல் போனை பார்த்துவிட்டால் அந்த மரம் இறந்துவிடும். ஒரு விளையாட்டு போல சமூக ஊடக பயன்பாட்டை குறைக்க இது பெரிய அளவில் உதவி செய்யும்.