Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WhatsApp : மோசடிகளை தடுக்க புதிய அம்சங்கள்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப்!

6.8 Million Fraud WhatsApp Accounts Deleted | வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், மோசடி சம்பவங்களில் இருந்து பயனர்களை பாதுகாக்கும் வகையில் இரண்டு புதிய அம்சங்களை மெட்டா சோதனை செய்து வருகிறது. அவை என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

WhatsApp : மோசடிகளை தடுக்க புதிய அம்சங்கள்.. அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வரும் வாட்ஸ்அப்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Aug 2025 11:30 AM

வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை வாட்ஸ்அப் மேற்கொண்டு வருகிறது. வாட்ஸ்அப் செயலியில் மோசடி சம்பவங்கள் உடன் தொடர்புடைய 6.8 மில்லியன் கணக்குகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை நீக்கம் அந்த நிறுவனம் செய்துள்ளது. இவ்வாறு மோசடி சம்பவங்கள் மூலம் கடுமையான பாதிப்புகளை பொதுமக்கள் சந்தித்து வரும் நிலையில், பொதுமக்களை மோசடி சம்பவங்களில் இருந்து பாதுகாப்பு வழங்கும் வகையில் வாட்ஸ்அப் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸ்அப்

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செயலி மூலம் தகவல் பரிமாற்றம், உரையாடல் ஆகியவை மிக எளிதாக மேற்கொள்ளப்படும் நிலையில், இது பலருக்கும் பிடித்த தேர்வாக உள்ளது. இவ்வாறு வாட்ஸ்அப் செயலி ஏராளமான மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதே வேலையில், வாட்ஸ்அப் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் மோசடி சம்பவங்களால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் தான் இந்த மோசடிகளை தடுக்கும் வகையில் வாட்ஸ்அப் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப் காலை மிஸ் பண்ணிட்டீங்களா? இனி கவலை இல்லை – வெளியான புது அப்டேட்

6.8 மில்லியன் மோசடி கணக்குகளை கண்டுபிடித்த வாட்ஸ்அப்

வாடஸ்அப் செயலியில் ஏராளமான மோசடி சம்பவங்கள் நடைபெறும் நிலையில், அதனை தடுப்பதற்காக அந்த நிறுவனம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மோசடி கணக்குகள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் சுமார் 6.8 மில்லியன் கணக்குகள் மோசடி சம்பவங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதை வாட்ஸ்அப் கண்டுபிடித்துள்ளது. இந்த நிலையில், அந்த கணக்குகளை ரத்து செய்துள்ள வாட்ஸ்அப் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க : வாட்ஸ்அப்பில் புதிய அம்சம்: இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்கிலிருந்து நேரடியாக புரொஃபைல் போட்டோ மாற்றலாம்

மோசடி சம்பங்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க வாட்ஸ்அப் நடவடிக்கை

பயனர்களை மோசடிகளில் இருந்து பாதுகாக்கும் வகையில் வாட்ஸ்அப் இரண்டு அம்சங்களை சோதனை செய்து வருகிறது. ஒன்று முன் பின் தெரியாத ஒரு நபரால் ஏதேனும் குழுவில் இணைக்கப்படும் பட்சத்தில் அந்த குழுவில் இணைவதற்கு முன்னதாக அந்த குழு குறித்த தகவல்கள் பயனர்களுக்கு தோன்றும். அதனை வைத்து குழுவில் இணையலாமா, வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்துக்கொள்ளலாம். இரண்டாவது, ஏதேனும் மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களுடன் பயனர்கள் உரையாடினால் அது குறித்து எச்சரிக்கும் வகையில் செய்தி தோன்றும் ஆகிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.