இளைஞர்களை ஈர்க்கும் மெட்டாவின் புதிய Imagine Me அம்சம்.. அப்படி என்ன சிறப்பு அதில்?
Meta's Imagine Me Feature | இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளின் தாய் நிறுவனமாக உள்ள மெட்டா இந்த மூன்று செயலிகளிலும் "Imagine Me" என்ற ஒரு அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த இமேஜின் மி அம்சத்தில் என்ன சிறப்பு அம்சங்கள், அதனை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மெட்டா (Meta) நிறுவனம் தனது செயலிகளான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் அவ்வப்போது சில அசத்தலான மாற்றங்கள் மற்றும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது இமேஜின் மி “Imagine Me” என்ற ஒரு அசத்தலான அம்சத்தை உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், மெட்டா அறிமுகம் செய்துள்ள இந்த புதிய அம்சத்தின் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள மெட்டா செயலிகள்
மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஆகிய செயலிகள் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு உள்ளிட்ட தேவைகளை இந்த செயலிகள் பூர்த்தி செய்யும் நிலையில், பலரும் இந்த செயலிகளை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் இவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இந்த செயலிகள் உள்ள நிலையில், பயனர்களின் அனுபவம் மற்றும் பயன்பாட்டை எளிதாக்கவும், மேலும் சிறப்பானதாகவும் மாற்ற இந்த செயலிகளின் தாய் நிறுவனமாக மெட்டா பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் தற்போது இந்த இமேஜின் மி அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் இமேஜின் மி அம்சம் அறிமுகம்
மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளில் இமேஜின் மி அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் ஒருவர் தனது புகைப்படத்தை என்னவாக வேண்டும் என்றாலும் மாற்றிக்கொள்ளலாம். செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் உதவியுடன் பயனர்களின் புகைப்படத்தை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப இந்த இமேஜின் மி அம்சம் மாற்றி கொடுக்கிறது.




இதையும் படிங்க : Instagram : இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop செட் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
இமேஜின் மி அம்சம் – பயனபடுத்துவது எப்படி?
- தனிப்பட்ட அல்லது குழு உரையாடல்களில் @Meta AI என குறிப்பிட்டு Imagine me as a என உங்களுக்கு விருப்பமான எதை வேண்டுமானாலும் குறிப்பிடலாம்.
- உதாரணமாக @Meta AI “Imagine me as a Disney Princess” என பதிவிட வேண்டும்.
- இதற்கு உங்களில் நேர், வலது மற்றும் இடது பக்க புகைப்படங்கள் என மொத்தம் மூன்று புகைப்படங்களை பதிவிட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி மிக சுலபமாக உங்கள் புகைப்படத்தை வேறொரு உருவமாக மாற்றிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.