அமெரிக்காவின் சக்திவாய்ந்த விமானத் தாங்கிக் கப்பலான ஆபிரஹாம் லிங்கனை ஈரான் பயப்படாமல் எதிர்கொள்ள முடியும் என்ற நம்புகிறது. அதற்கு பின்னால், அதன்போர் உத்திகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அமெரிக்க கடற்படையை நேரடியாக சமமாக எதிர்கொள்ள முடியாது என்பதை உணர்ந்துள்ள ஈரான், ஹார்மூஸ் நீர்முனை போன்ற புவியியல் சூழலை பயன்படுத்தி, சிறிய அதிவேக படகுகள், ட்ரோன்கள், சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கேரியர் கில்லர் என அழைக்கப்படும் ஏவுகணைகள் மூலம், விலையுயர்ந்த அமெரிக்க கப்பல்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்க முடியும் என கருதுகிறது.