Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Instagram : இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop செட் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Instagram Story AI Backdrop | இன்ஸ்டாகிராம் செயலி தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபோக்கிற்கு சிறந்ததாக விளங்குகிறது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியில் உள்ள ஸ்டோரி அம்சத்தை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு பேக்டிராப் வைத்து ஸ்டோரி பதிவு செய்வது எப்படி, அதில் என்ன என்ன மாற்றங்களை செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

Instagram : இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop செட் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 18 Jul 2025 23:17 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள செயலிகளில் ஒன்றுதான் மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram). இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு செயலியாக உள்ள நிலையில், பலரும் அதனை தங்களது அன்றாட வாழ்க்கையில் அதிகம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் மத்தியில் மிகவும் சிறப்பு வாய்ந்த செயலியாக அது உள்ள நிலையில், அதில் பல சிறப்பு அம்சங்களும் உள்ளன. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரி (Story) போடுவதற்கு செயற்கை நுண்ணறிவு  பேக்டிராப் (Artificial Intelligence Backdrop) செட் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடும் பொதுமக்கள்

இன்ஸ்டாகிராம் செயலி தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமன்றி, பொழுதுபோக்கிற்கும் ஒரு சிறந்த அம்சமாக உள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்புவது, வீடியோ கால், ஆடியோ கால் செய்வது உள்ளிட்ட செயல்களை செய்யலாம். இது தவிர இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரி பகிர்தல், பாடல்களை பகிர்தல் ஆகியவற்றுக்கும் சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி நமக்கு பிடித்த விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ளலாம். இவ்வாறு ஏராளமான பொதுமக்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அம்சத்தை பயன்படுத்தி தங்களது அன்றாட வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகளை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க : இன்ஸ்டாகிராமில் புதிய ரீபோஸ்ட் வசதி – எப்படி செயல்படும்?

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop செட் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் ஸ்டோரி அம்சத்திற்கு சென்று அதில் என்ன புகைப்படத்தை ஸ்டோரியாக பதிவு செய்ய விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்ய வேண்டும்.
  2. புகைப்படத்தை எடிட் செய்துக்கொண்டு இருக்கும்போது அங்கே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் கொடுக்கப்பட்டுள்ள Backdrop அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  4. இதன் பிறகு உங்களது புகைப்படத்தில் உள்ள தகவல்கள் ஆராயப்படும்.
  5. பிறகு நீங்கள் உங்களுக்கு தேவையான பகுதிகளை மார்க் செய்துக்கொள்ளலாம்.
  6. அதற்கு பிறகு Next கொடுக்கும்போது நீங்கள் என்ன மாற்றங்களை செய்ய விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிட சொல்லி கூறும்.
  7. அதனை பயன்படுத்தி நீங்கள் உங்கள் பேக்டிராப்பில் என்ன மாற்றங்களை செய்ய விரும்புகிறீர்கள் என்பதனை எழுத வேண்டும்.
  8. அவ்வாறு எழுதும்போது அது எந்தவித எழுத்துப்பிழை மற்றும் இலக்கண பிழை இல்லாமல் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
  9. பிறகு Next என்பதை கிளிக் செய்யும் பட்சத்தில் உங்களுக்கு இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும்.
  10. அதில் உங்களுகு எந்த பேக்டிராப் பிடித்துள்ளதோ அதனை தேர்வு செய்து ஸ்டோரியாக வைத்துக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக எளிதாக இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பேக்டிராப்பை மாற்றம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.