தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள படம்தான் ஜன நாயகன். இந்த படமானது கடந்த 2026ஆம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீசிற்கு 2 நாட்கள் முன்புவரை சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால், சென்சார் வாரியத்தின் மீது ஜன நாயகன் தயாரிப்பு நிறுவனம் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் வழக்கு தொடர்ந்திருந்தது.