AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்ஸ்டாகிராமில் புதிய ரீபோஸ்ட் வசதி – எப்படி செயல்படும்?

Instagram New Feature : இன்ஸ்டாகிராம் அதன் பயனர்களின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எக்ஸ் செயலியில் உள்ளது போல நமக்கு பிடித்த பதிவுகளை ரீபோஸ்ட் செய்யும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் புதிய ரீபோஸ்ட் வசதி – எப்படி செயல்படும்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Jun 2025 20:33 PM IST

 புகழ்பெற்ற சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கும் இன்ஸ்டாகிராம், நாள்தோறும் புதிய அம்சங்களை பரிசோதனை செய்து, அதன் பயனாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க முயன்று வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் (Instagram) தற்போது ரீபோஸ்ட்(Repost) என்ற புதிய அம்சத்தை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம்,  எக்ஸ் (X) பக்கத்தில் உள்ள ‘ரீட்வீட்’ வசதியைப் போலவே செயல்படும் என்று கூறப்படுகிறது. இந்த வசதி நாம் விரும்பும் பதிவுகளை நமது ஃபாலோயர்களுக்கு பகிரும் வகையில் இந்த புதிய அப்டேட் கொண்டு வரப்படவிருக்கிறது.  தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான கட்டுரையின் அடிப்பைடையில் இந்த புதிய அம்சம் எவ்வாறு செயல்படும் என பார்க்கலாம்.

புதிய அம்சம் எப்படி செயல்படும்?

புதிய ‘ரீபோஸ்ட்’ அம்சம், பயனர்களுக்கு தங்கள் சொந்த பதிவுகளோடு கூடவே, பிறரின் பதிவுகளையும் நேரடியாக தங்கள் மெயின் பீடில் பகிரும் வசதியை வழங்கும். இதற்கு முன் நமக்கு பிடித்த பதிவுகளை ஸ்டோரிஸ்  அல்லது டைரகட் மெசேஜ் வழியாக மட்டும் பகிர முடியும்.  உதாரணமாக உங்களுக்கு பிடித்த ஒரு ரீல்ஸை முன்பு நண்பர்களுக்கு டிஎம் செய்வோம். இனி ரீபோஸ்ட் செய்வதன் மூலம் உங்கள் நண்பர்கள் அதனை பார்த்துக்கொள்ள முடியும்.  இந்த அம்சம் தற்போது சில தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளர்களிடையே பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இது வெற்றிகரமாக அமைந்தால், விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம்.

ரீபோஸ்ட் செய்யும் போது என்ன நடக்கும்?

உங்களால் உங்கள் பதிவுகளை மற்றும் பிறர் பதிவுகளையும் உங்கள் பீடில் பகிர முடியும். இந்த ரீபோஸ்ட் செய்யப்பட்ட பதிவுகள், உங்கள் பின்தொடர்பவர்களின் பீடிலும் தோன்றும். மேலும், உங்கள் ப்ரொஃபைலில் Repostsஎன்ற தனி டேப் உருவாகும். அதில் நீங்கள் பகிர்ந்த அனைத்து ரீபோஸ்ட் பதிவுகளும் சேமிக்கப்படும். உங்கள் பதிவுகளை யாரெல்லாம் ரீபோஸ்ட் செய்ய அனுமதிக்கலாம் என்பதையும் நீங்கள் கட்டுப்படுத்த முடியும்.

கண்டென்ட் கிரியேட்டர்களுக்கான காத்திருக்கும் ஜாக்பாட்

இந்த புதிய அம்சம் கண்டென்ட் கிரியேட்டர்களுக்கான மிகவும் பயனளிக்கக்கூடியதாக இருக்கும். ஏனெனில், இப்போது அவர்களின் பதிவுகள் மற்ற பயனர்களால் நேரடியாக பீடில் பகிரப்படுவதால், அவர்களது பதிவுகள் அதிக பயனர்களை சென்றடையும். இதன் மூலம் அவர்களது ரீல்ஸ்களுக்கு அதிக வியூஸ் கிடைக்கும்.  இது போன்ற ‘ரீபோஸ்ட்’ மூலம் அதிகமான பங்கு பெறும் வாய்ப்பு உருவாகிறது, மேலும் பதிவுகளை உரிய கிரெடிட்டுடன் பகிரும் நடைமுறையை ஊக்குவிக்கும்.

பயனர்களின் ஸ்டோரிஸ், மெசேஜஸ் போன்ற தனிப்பட்ட அம்சங்களில் எவ்வித மாற்றமும் இருக்காது. அவை  பாதுகாப்பாகவே இருக்கும். இந்த அம்சம் உங்கள் ஃபீடில் மட்டுமே செயல்படும்.  பல ஆண்டுகளாக பயனர்கள் எதிர்பார்த்த ரீபோஸ்ட் வசதி இப்போது நேரடி அம்சமாக இணைக்கப்பட உள்ளது. இந்த வசதி பயனர்களை அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us