AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Instagram : இனி உங்களுக்கு பிடித்தபடி Profile-ஐ வடிவமைக்கலாம்.. இன்ஸ்டாகிராமில் வரப்போகும் அசத்தல் அம்சம்!

Instagram's Upcoming New Feature | இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், மெட்டா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் முகப்பு பக்கத்தை வடிவமைக்கும் புதிய அம்சம் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Instagram : இனி உங்களுக்கு பிடித்தபடி Profile-ஐ வடிவமைக்கலாம்.. இன்ஸ்டாகிராமில் வரப்போகும் அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம் (Pic Credit - Freepik)
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 13 Jun 2025 16:27 PM IST

உலக அளவில் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய செயலியாக மெட்டா (Meta) நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் (Instagram) உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், ஏற்கனவே இருக்கும் சிறப்பு அம்சங்களை மேலும் எளிதாக பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யவும் மெட்டா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் காரணமாக இன்ஸ்டாகிராம் செயலியில் தொடர்ந்து பல்வேறு புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களை ஒழுங்கமைக்கும் ஒரு புதிய அம்சத்தை விரைவில் மெட்டா அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராமில் விரைவில் வரப்போகும் அசத்தல் அம்சம்

தொழில்நுட்ப வளர்ச்சியின் (Technology Development) காரணமாக பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் அதிக மொபைல் செயலிகளை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் செயலியாக உள்ளது தான் மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம். இந்த செயலி தகவல் பரிமாற்றம் மற்றும் பொழுதுபோக்கு என பல சிறப்பு அம்சங்களை வழங்குவதால் பலரும் இதனை தங்களது அன்றாட வாழ்வில் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு ஏராளமான மக்கள் இதனை விரும்பி பயன்படுத்தும் நிலையில், பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் தொடர்ந்து பல புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் புகைப்படங்களை பதிவிடுவதற்கான புதிய ரேஷியோ (Ratio) அளவை அறிமுகம் செய்தது. தற்போது, Instagram Profile பக்கத்தை பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தும் வகையில் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

இனி உங்களுக்கு பிடித்தபடி இன்ஸ்டாகிராம் Profile-ஐ வடிவமைக்கலாம்

இன்ஸ்டாகிராமில் ஒருவர் தனது கணக்கில் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடங்கிய பக்கம் தான் Profile என அழைக்கப்படுகிறது. இது நாம் எந்த புகைப்படத்தை சமீபத்தில் பதிவேற்றம் செய்தோமோ அதனை தான் முதலில் காட்டும். இன்ஸ்டாகிராமில் தற்போது பின் செய்யும் ஆப்ஷன் உள்ள நிலையில், அதனை பயன்படுத்தி நமக்கு முக்கியமான மற்றும் பிடித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மும்பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம். மற்றபடி, மீதமுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பின்னால் சென்றுவிடும்.

ஆனால் இன்ஸ்டாகிராமில் வரவுள்ள இந்த புதிய அம்சம் Profile பக்கத்தில் என்ன புகைப்படம் இருக்க வேண்டும் என்பதை பயனர்களே தீர்மானிக்கு வகையில் அனுமதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் தற்போது சோதனையில் உள்ளதாக கூறப்படும் நிலையில், மிக விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us