AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.1 கோடி வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கிய பெண்.. ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம் ஈட்டுகிறார்!

Woman Left 1 Crore Job To Build Her Own Business | லக்னோவில் பிறந்த ஆரோஹி சூர்யா என்பவர், உடல்நல குறைவால் வேலையை விட்ட நிலையில், புதியதாக தொழில் தொடங்கி தான் வேலை செய்ததில் வாங்கிய சம்பளத்தை விடவும் 2 மடங்கு சம்பாதிக்கிறார்.

ரூ.1 கோடி வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கிய பெண்.. ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம் ஈட்டுகிறார்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Nov 2026 21:07 PM IST

சொந்தமாக தொழில் தொடங்கி அதில் சாதித்த பலரை பார்த்திருப்போம். அவர்களில் பலரும் வேலையின்றி, வாழ்வாதாராத்திற்கு தொழில் தொடங்கி அதன் மூலம் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருப்பர். ஆனால், துபாயில் ரூ.1 கோடி ஆண்டு வருமானம் பெற்று வந்த பெண் ஒருவர், வேலையை ராஜினாமா செய்து அதன் பிறகு தொடங்கிய தொழில் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.2 கோடி வருமானம் ஈட்டி வருகிறார். யார் அவர், என்ன தொழில் செய்து இவ்வளவு ஆண்டு வருமானம் ஈட்டுகிறார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரூ.1 கோடி வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்கிய பெண்

துபாயில் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கி வந்தவர் ஆரோஹி சூர்யா. இவர் வேலை செய்து வந்த நிலையில், தனக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக தனது வேலையை ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில், அடுத்த என்ன செய்வது என தெரியாமல் தவித்த ஆரோஹிக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அப்படி அவருக்கு தோன்றிய யோசனை மூலம் உருவானது தான் “ஓட்டிஷ் பால் ப்ராண்ட்”. இவர் வருமானத்திற்காக தொடங்கிய இந்த தொழில் மூலம் தற்போது முன்பு செய்த வேலையில் வாங்கி வந்ததை விடவும் இரண்டு மடங்கு வருமானம் ஈட்டி வருகிறார்.

இதையும் படிங்க : வங்கி கணக்கில் எடுக்காமல் இருக்கும் பணம்.. ஆர்பிஐ அசத்தல் அம்சம்!

ஓட்ஸ் பால் மூலம் தொழில் தொடங்கி சாதனை படைத்த பெண்

லக்னோவில் பிறந்தவர் ஆரோஹி சூர்யா. இவர் ஜெய்ப்பூரில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் பட்ட படிப்பை முடித்துள்ளார். பின்னர் துபாயில் உள்ள கல்லூரியில் எம்பிஏ படித்துள்ளார். அதன்பிறகு சுமார் 7 ஆண்டுகள் துபாயில் பணியாற்றி வந்துள்ளார். படிப்படியாக உயர்ந்து ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் நபராக உயர்ந்தார். பணிபுரியும்போது ஏற்பட்ட உடல்நல சிக்கல்கள் காரணமாக வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க : தங்கத்தில் கலப்படம்.. வியாபாரிகள், வாடிக்கையாளர்களுக்கு ஜிஜேசி எச்சரிக்கை!

அப்போது அவரது தாய்க்கு சர்க்கரை நோய் இருந்த நிலையில், மருத்துவர்கள் பாலை முற்றிலுமால தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதன் காரணமாக தனது தாய்க்காக ஓட்ஸ் பாலை தயாரிக்க தொடங்கியுள்ளார். அங்கிருந்து தான் அவர் தனது தொழிலை உருவாக்க தொடங்கியுள்ளார். அதன்படி, 2022 ஆம் ஆண்டு தனது கனவருடன் இணைந்து டான்சிங் கவ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ரூ.60 லட்சம் முதலீட்டில் இந்த தொழிலை தொடங்கிய அவர், தற்போது ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானத்தை ஈட்டும் நபராக மாறியுள்ளார்.

Follow Us