AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Success Story

Success Story

தொழில் துவங்கி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் சிலரால் தான் துணிந்து களமிறங்கி தொழிலில் வெற்றிக்கொடி நாட்ட முடியும். அதற்கு சரியான திட்டமிடல், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவை இருந்தால் அனைவராலும் வெற்றி பெற முடியும். இந்தியாவில் தொழிலில் சாதித்தவர்கள் பலரும் எந்த பின்புலமும் இல்லாமல் எளிய குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களது வெற்றி வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் ஒவ்வொருவருக்கும் உத்வேகமாக இருந்து வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் தொழில் துவங்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர்கள் வாழ்க்கையில் பெரிய இடத்தில் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. எளிய குடும்பத்தில் வறுமையின் பிடியில் இருந்த எத்தனையோபேர் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தில் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை நமக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக இருக்கும். இந்த பக்கத்தில் தொழிலில் வெற்றி பெற்றவர்களின் கதையையும் அவர்களின் பின்னணியையும் தெரிந்துகொள்ளலாம்.

Read More

ரூ.12,000 சம்பளம் முதல் ரூ.32,000 கோடி நிறுவனம் வரை.. சாதித்து காட்டிய திருச்சிக்காரர்.. யார் இந்த கிரிஷ் மாத்ருபூதம்!

Trichy Man Achieved Global Tech Success | திருச்சியை சேர்ந்த நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் ரூ.12,000-க்கு செய்த வேலையை உதறிவிட்டு, புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கி தற்போது ரூ.32,000 கோடியாக அந்த நிறுவனத்தை வளர்த்துள்ளார். அவர் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிக் டாக் வீடியோ மூலம் தொடங்கப்பட்ட தொழில்.. ரூ.32,000 கோடி நிறுவனத்தை உருவாக்கி அசத்திய தோழிகள்!

Two Girl Best Friends Build Multi-Crore Pickle Business | இரண்டு தோழிகள் தாங்கள் பார்த்த டிக் டாக் வீடியோ மூலம் ஒரு தொழிலை உருவாக்கி தற்போது சுமார் ரூ.32,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை கட்டமைத்துள்ளனர். அவர்களின் சாதனை பயணம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தினமும் 7 கோடி முட்டை… ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வர்த்தகம் – இந்தியாவின் முட்டை நகரின் பின்னணி

World Egg Day : உலகின் முட்டை தினம் அக்டோபர் 9, 2026 அன்று கொண்டாடப்படுகிறது.  நாட்டின் பெரும்பாலான முட்டை தேவையை நாமக்கல் பூர்த்தி செய்கிறது. இங்கு தினமும் 7 கோடி அளவுக்கு முட்டை தயாராவதாகவும், ஆண்டுக்கு ரூ.10,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அன்று டெலிவரி ஊழியர்.. இன்று நிறுவனங்களின் தலைவர்.. பெங்களூரு இளைஞரின் வெற்றிக் கதை!

Swiggy Delivery Executive to Entrepreneur | வாழ்க்கையில் பூஜியத்தில் இருந்து பெரிய அளவில் சாதனை படைப்பது சிலருக்கு மட்டுமே சாத்தியமானதாக உள்ளது. காரணம், அதற்கு மனதளவிலும், உடல் அளவிலும் உறுதியாக இருக்க வேண்டும். அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் டெலிவரி ஊழியராக இருந்து பிறகு நிறுவனங்களின் தலைவராக மாறியுள்ளார்.

வெறும் ரூ.100-ல் தொடங்கிய தொழில்.. ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம்.. சிறு தொழில் மூலம் சாதித்து காட்டிய இளவரசி!

Woman Built Company With 2 Crores Turn Over | சிறு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பது சற்று சவாலான ஒன்றுதான். ஆனால், உசிலம்பட்டியை பூர்விகமாக கொண்ட பெண் ஒருவர் வெறும் ரூ.100 முதலீடு மூலம் ரூ.2 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

வெறும் ரூ.4 லட்சம் முதலீடு.. 10 மாதங்களில் ரூ.2 கோடி வருமானம்.. அசத்திய இருவர்!

Bengaluru Youngsters Created Business With 2 Crore Rupees In Just 10 Month | தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். ஆனால், தொழில் தொடங்குவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக பலரும் தொழில் தொடங்கும் முடிவை எடுப்பதில்லை.

வறுமையான குடும்ப பின்னணி… தனியாக ராக்கெட்டை விண்ணில் ஏவிய தமிழன்… – யார் இந்த ஆனந்த் மேகலிங்கம்?

Success Story : பள்ளிக்கு செல்ல 6 கி.மீ நடந்து செல்ல வேண்டிய கிராமத்தில் இருந்து இன்று விண்வெளி துறையில் அளப்பெரிய சாதனைகளை தமிழரான ஆனந்த் மேகலிங்கம் படைத்துள்ளார். இவர் தயாரித்த RHUMI-1 ராக்கெட் கடந்த 2024 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.

தினமும் ரூ.10க்கு கூலி வேலை பார்த்த சிறுவன்… இன்று ரூ.681 கோடி வருவாய் ஈட்டும் தொழிலதிபர்- யார் இந்த முஸ்தபா?

Success Story : சிறுவயதில் தினமும் ரூ.10க்காக கூலி வேலை பார்க்கத் தொடங்கி, இன்று கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் இளைஞனாக வளர்ந்திருக்கிறார் கேரளாவை சேர்ந்த முஸ்தபா. பிரபல உணவு நிறுவனமான ஐடி ஃபிரெஷ் ஃபுட்டின் நிறுவனர். அவரது வெற்றிக் கதை குறித்து பார்க்கலாம்.

60 வயதில் எடுத்த முக்கிய முடிவு… இன்று 93 வயதில் இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவர் – யார் இந்த இவர்?

Success Story: வாழ்க்கையில் சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் லக்ஷமன் தாஸ் மிட்டல். எல்ஐசி ஏஜெண்டான இவர் 60 வயதில் எடுத்த ஒரு முடிவு, இன்று 93 வயதில் இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது.

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்… ஏஐயில் சாதித்த சென்னை இளைஞர் – யார் இந்த அரவிந்த் ஸ்ரீநிவாஸ்?

Success Story : எம்3எம் ஹுரூன் இந்தியா ரிச் லிஸ்ட் 2025 என்ற உலக அளவில் பணக்காரர்கள் கொண்ட பட்டியலில் சென்னையைச் சேர்ந்த அரவிந்த் ஸ்ரீநிவாஸ் இளம் பணக்காரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் புகழ்பெற்ற Perplexity AI நிறுவனத்தை உருவாக்கியவர்களில் முக்கியமானவர்.

வீட்டு வாசலில் முடி வெட்டியவர்… இன்று ரஜினிகாந்த் முதல் விராட் கோலி வரை அவர் தான் ஸ்டைலிஸ்ட் – யார் அந்த அலிம் ஹகீம்?

Success Story : இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்டாக இருக்கிறார் அலிம் ஹகீம். ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் அவருக்கு அலிம் தான் ஹேர் ஸ்டைலிஸ்டாக பணிபுரிந்திருக்கிறார். தனது 9 வயதில் தந்தையை இழந்த அலிம், தனது கடுமையான உழைப்பால் இந்த நிலைமையை அடைந்திருக்கிறார்.

18 வயதில் CEO ஆன மாணவர்… மாதம் ரூ.12 கோடி லாபம் ஈட்டும் நிறுவனம் – சாதித்து எப்படி?

Success Story : அமெரிக்காவில் 18 வயது மாணவர் தான் உருவாக்கிய கால் ஏஐ நிறுவனத்தின் மூலம் மாதம் ரூ.12 கோடி வரை சம்பாதிக்கிறார். அவரது வெற்றிக்கு ஆர்வமும் கடின உழைப்புமே காரணம். அவரது வெற்றிக்கதை குறித்து இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மகனுக்காக உருவாக்கிய கெமிக்கல் இல்லா நீச்சல் குளம் – ரூ.3 கோடி ஆண்டு வருமானம் ஈட்டும் நபர் – எப்படி நடந்தது இந்த மேஜிக்

Success Story : கோயம்புத்தூரை சேர்ந்த விகாஷ் குமார், தன் மகனுக்காக கெமிக்கல் இல்லாத நீச்சல் குளத்தை உருவாக்கியவர் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3 கோடி வருமானத்தை ஈட்டும் தொழிலாக மாற்றியிருக்கிறார். அவரது வெற்றிக் கதையை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

1 ரூபாய் ஷாம்பூ பாக்கெட்… இந்தியாவில் தொழில் புரட்சிக்கு காரணமான தமிழர் – கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிக் கதை

Success Story : இந்தியாவில் 1980கள் காலக்கட்டத்தில் சோப்பு, ஷாம்பு போன்ற பொருட்கள் மிகப்பெரிய பாக்கெட்டுகளில் மட்டுமே விற்கப்படும். இதனை எளிய மக்கள் விலை கொடுத்து வாங்க முடியாத நிலை இருந்தது. இதனயடுத்து ஷாம்புவை சிறிய பாக்கெட்டுகளில் அறிமுகப்படுத்தி இந்தியாவின் தொழில்புரட்சிக்கு வித்திட்டவர் சின்னி கிருஷ்ணன்.

மூங்கில் இலையில் துணிகள்… ரூ.200 கோடி நிறுவனத்தை உருவாக்கிய தமிழர்

From Struggle to Success: ராஜபாளையத்தை சேர்ந்த இளைஞர் விஜயராகவன் திரூப்பூரில் ரூ.5 லட்சம் முதலீட்டில் தொடங்கி, ரூ.200 கோடி நிறுவனத்தை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக மூங்கில் இலையில் துணி உருவாக்கி மிகப்பெரும் சாதனை படைத்திருக்கிறார். அவரது வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.