வீட்டு வாசலில் முடி வெட்டியவர்… இன்று ரஜினிகாந்த் முதல் விராட் கோலி வரை அவர் தான் ஸ்டைலிஸ்ட் – யார் அந்த அலிம் ஹகீம்?
Success Story : இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்டாக இருக்கிறார் அலிம் ஹகீம். ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் அவருக்கு அலிம் தான் ஹேர் ஸ்டைலிஸ்டாக பணிபுரிந்திருக்கிறார். தனது 9 வயதில் தந்தையை இழந்த அலிம், தனது கடுமையான உழைப்பால் இந்த நிலைமையை அடைந்திருக்கிறார்.

இந்தியாவில் திரை உலகினர் முதல் கிரிக்கெட் உலகினர் வரை பலரது ஸ்டைலிஷான லுக்கிற்கு காரணம் ஒரே ஒருவர் தான். அவர் தான் இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்ட் அலிம் ஹகீம். இந்திய பிரபலங்கலான எம்.எஸ்.தோனி, விராட் கோலி, ரஜினிகாந்த் (Rajinikanth), ரன்பீர் கபூர், போன்ற பல பிரபலங்களுக்கு இவர் தான் முடி திருத்துகிறார். இவர் ஒரு முறை முடி வெட்டுவதற்கு ரூ.1 லட்சம் வசூலிக்கிறார். அதற்கு நாம் கூடுதலாக ரூ.18,000 ஜிஎஸ்டியும் சேர்த்து எழுத்த வேண்டும். இப்படி இந்தியாவில் மிகவும் பிரபலமானவராக இருக்கும் இவர் தன் வீட்டு வாசலில் முடி வெட்டி தான் தன் வாழ்க்கையை தொடங்கினார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவரது வெற்றிக் கதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
கூலியில் ரஜினியின் ஹேர் ஸ்டைலுக்கு இவர் தான் காரணம்
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கூலி படத்தில் அவரது ஹேர் ஸ்டைலை அலிம் ஹகிம் தான் உருவாக்கினார். இதற்கு முன் ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் மணமகனின் ஹேர் ஸ்டைல் முழுவதையும் அலிம் ஹகீம் தான் கவனித்தார். இவர் ஒரு சினிமா படப்பிடிப்பிற்கு சென்றால் குறைந்தது ரூ.15 லட்சம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கிறார். இவரிடம் ஒரே ஒரு முறை ஹேர் கட்டிங்கிற்கு ரூ.5 லட்சம் வாங்கியிருக்கிறார். பிரபலங்கள் பலரும் இவருக்காக பல நாட்கள் காத்திருந்து முடி வெட்டுகின்றனர். அதற்கு காரணம் ஒவ்வொருக்கும் ஸ்பெஷலான முடி திருத்தும் தொழில் தான் காரணம்.




இதையும் படிக்க : 18 வயதில் CEO ஆன மாணவர்… மாதம் ரூ.12 கோடி லாபம் ஈட்டும் நிறுவனம் – சாதித்து எப்படி?
அலிம் ஹகீமின் வாழ்க்கை போராட்டம்
இன்று இந்தியாவின் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்டாக இருக்கும் அலிம் ஹகீம் தனது வாழ்க்கையை மிகவும் அடிமட்டத்தில் இருந்து துவங்கினார். சிறு வயதிலேயே தந்தையை இழந்து, அவரது குடும்பம் வறுமையில் வாடியது. தனது 9 வயதில் தந்தையை இழந்த அலிம், வாழ்க்கையில் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறினார். அவர் அப்பா விட்டு சென்ற தொழில் அவர் கண்முன் இருந்தது. அப்போது கையில் எடுத்த கத்திரிக்கோல் இன்று வரை அவருக்கு கொடுக்கிறது.
ரஜினிகாந்த்துடன் அலிம் ஹகீம்
View this post on Instagram
குடும்ப வறுமையின் காரணமாக தனது தாயின் வழி காட்டுதலின் படி வீட்டு வாசலில் சிறிய முடி திருத்தும் கடையை தொடங்கினார். அங்கிருந்து தனது திறமையால் மெல்ல வளரத் தொடங்கினார். கலை நிகழ்ச்சிகளுக்கு வரும் கலைஞர்களுக்கு ஹேர் ஸ்டைல் செய்யத் தொடங்கினார். அவரது திறமையைக் கண்டுபிடித்த லோரியல் நிறுவனம், அவரை வெளிநாடு அனுப்பி ஹேர் ஸ்டைலிங் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்தது. இது அவரது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
இதையும் படிக்க : 1 ரூபாய் ஷாம்பூ பாக்கெட்… இந்தியாவில் தொழில் புரட்சிக்கு காரணமான தமிழர் – கவின்கேர் நிறுவனத்தின் வெற்றிக் கதை
பிரபலங்களுக்கு விருப்பமான ஹேர் ஸ்டைலிஸ்ட்
இந்தியாவின் முன்னணி ஹேர் ஸ்டைலிஸ்ட்களில் ஒருவராக இருக்கிறார் அலிம் ஹகீம். அவரது வாடிக்கையாளர்கள் லிஸ்ட் மிக நீளமானது. குறிப்பாக விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், மகேஷ் பாபு போன்றோர் உள்ளனர். பிரபலங்களின் ஹேர் ஸ்டைலை தோற்றத்துக்கு ஏற்ப மாற்றும் அவரது திறமை, அவரை இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஸ்டைலிஸ்ட்டாக மாற்றியுள்ளது.