Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா? சிபிஐசி தலைவர் விளக்கம்

Gst Update: கடந்த செப்டம்பர் 3, 2025 அன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா என்பதற்கு சிபிஐசி தலைவர் விளக்கமளித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா? சிபிஐசி தலைவர் விளக்கம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Sep 2025 16:49 PM IST

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை முதல் அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் சேர்க்கப்படவில்லை. தற்போது பல்வேறு தரப்பினரும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த செப்டம்பர் 3, 2025 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல், டீசல் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி கொண்டுவரப்பட்டால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என மக்கள் எதிர்பார்த்தனர். இந்த  நிலையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க சேவை வாரியத்தின் (CBIC) தலைவர்  சஞ்சய் குமார் அகர்வால் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.  இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாநிலங்களின் முக்கிய வருவாய் மூலங்கள்

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க சேவை வாரியத்தின் தலைவர் சஞ்சய் குமார் அகர்வால் இது குறித்து விளக்கமளித்தார். அவரிடம் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்கலாமா என கேட்கப்பட்டபோது, பெட்ரோல், டீசல் தற்போது மத்திய அரசு வசூலிக்கும் எக்சைஸ் டியூட்டி மற்றும் மாநிலங்கள் வசூலிக்கும் விலை கூட்டு வரி (VAT) உட்பட்டது. இவை இரண்டும் மத்திய, மாநில அரசுகளுக்கு முக்கிய வருவாய் ஆதாராமாக உள்ளன. குறிப்பாக பல மாநிலங்களின் மொத்த வருவாயில் 25 முதல் 30 சதவிகிதம் வரை இப்பொருட்களில் இருந்தே கிடைக்கிறது. எனவே இதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் உடனடியாக கொண்டு வர இயலாது என சஞ்சய் குமார் அகர்வால் விளக்கமளித்துள்ளார்.

இதையும் படிக்க : லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸிற்கு ஜிஎஸ்டி நீக்கம்: உண்மையில் எவ்வளவு சேமிக்க முடியும்?

நிதி அமைச்சரின் கருத்து

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதே கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், சட்ட ரீதியாக பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டியில் சேர்க்க தயாராக இருக்கிறோம். ஆனால் இது மாநிலங்களின் முடிவின் பேரில் தான் சாத்தியம். மாநிலங்கள் ஒப்புக்கொண்டால் ஜிஎஸ்டி கவுன்சில் அதற்கான வரி விகிதம் தீர்மானிக்கப்படும். பின்னர் அது சட்டமாக்கப்படும் என அவர் விளக்கமளித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது பெட்ரோல், டீசல் மற்றும் மதுபானங்கள் ஆகியவை அதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டன. காரணம், இவை மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் நேரடியாக அதிக வருவாய் தரும் பொருட்கள். இவை ஜிஎஸ்டிக்கு மாற்றினால் தங்களின் வருவாயில் பெருமளவில் குறையும் என மாநிலங்கள் கருதுகின்றன. அதனுடன் விலை நிர்ணயம் செய்வதிலும் வரி கொள்கைகளிலும் தங்கள் பங்கு குறையும் என மாநிலங்கள் கருதுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : ஜிஎஸ்டி குறைப்பு – எந்ததெந்த மாடல் கார்களின் விலை குறையும்? முழு விவரம்

சிபிஐசி தலைவரின் கருத்தும் முன்னதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த விளக்கமும், இப்போது பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்படாது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.