குறையும் கார்களின் விலை… கார் லோனுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கும் வங்கிகள் – எது சிறந்தது?
Auto Sector Relief: ஜிஎஸ்டி வரி குறைப்பு ஆட்டோமொபைல் துறைக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதனால் கார்களின் விற்பனை முன்பைக் காட்டிலும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கிகள் கார் கடனுக்கு அளிக்கும் சிறப்பு சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

கடந்த செப்டம்பர் 3, 2025 அன்று நடைபெற்ற ஜிஎஸ்டி (GST) கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைக்கு மாற்றம் செய்யப்பட்டு இரண்டு அடுக்குகளாக வரிவிதிக்கும் முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் படி இனி பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள் 18 %, 5% வரை ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் செப்டம்பர் 22, 2025 அன்று முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது ஆட்டோமொபைல் துறைக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இதனால் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றம்
இன்டர்னல் கம்பஷன் எ்ஜின் கார்கள் 18% மற்றும் 40% என இரு ஜிஎஸ்டி விகிதங்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை வருகிற செப்டம்பர் 22, 2025 முதல் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. மேலும் எலக்ட்ரிக் கார்களுக்கு தற்போதைய 5 சதவிகிதம வரி மாற்றம் இன்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் கார்கள் வாங்க விரும்புவர். இதனை கருத்தில் கொண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கார் கடன்களில் சிறப்பு சலுகைகள் அறிவித்துள்ளன. அது குறி்து பார்க்கலாம்.




இதையும் படிக்க : ஜிஎஸ்டி குறைப்பு – எந்ததெந்த மாடல் கார்களின் விலை குறையும்? முழு விவரம்
வங்கிகள் வழங்கும் சலுகைகள்
- கடனை முன் கூட்டியே அடைத்தால் அவற்றுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
- சுலபமான மாதாந்திர தவணை செலுத்தும் வாய்ப்புகள்
- கடன் பெற விண்ணப்பக் கட்டணம் இல்லை.
- நல்ல கிரெடிட் ஸ்கோர் உள்ளவர்களுக்கு வட்டியில் தள்ளுபடி
ஆகியவை பொதுவாக பண்டிகை காலங்களில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கும். இதன் மூலம தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப சரியான கடனை தேர்வு செய்ய வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வங்கிகள் வழக்கும் வட்டி விகிதங்கள் மற்றும் மாதத் தவணை விவரம்
மணி கண்ட்ரோல் இணைய தளத்தில் வெளியான தகவின் படி புதிய கார் லோன்களுக்கு வங்கிகள் 7.8 சதவிகிதம் முதல் 9.99 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கின்றன. இது வாடிக்கையாளர் கிரெடிட் புரொஃபைல் மற்றும் வருமானம் போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.
- பஞ்சாப் நேஷனல் வங்கி கார் கடனுக்கு 7.8 சதவிகிதம் வட்டி நிர்ணயித்துள்ளது. வங்கியில் மாதத் தவணை ரூ.20,18 முதல் செலுத்த வேண்டியிருக்கும்.
- யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி கார் கடனுக்கு 7.09 சதவிகிதம் வட்டி வழங்குகின்றன. இதற்காக மாதத் தவணை ரூ.20, 229 முதல் செலுத்த வேண்டியிருக்கும்.
- கனரா வங்கியானது 8.15 சதவிகிதம் வட்டி நிர்ணயித்துள்ளது. இதற்காக மாதத் தவணை ரூ.20,348 செலுத்த வேண்டியிருக்கும்.
- பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கார் கடனுக்கு 8.15 சதவிகிதம் வட்டி நிர்ணயித்துள்ளது. இதற்கு மாதத் தவணையாக ரூ.20,468 செலுத்த வேண்டியிருக்கும்.
- இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கியில் கார் கடனுக்கு 8.95 சதவிகிதம் வட்டி நிர்ணயித்துள்ளது. இதற்கு மாதத் தவணையாக ரூ. 20,734 செலுத்த வேண்டியிருக்கும்.
இதையும் படிக்க : ஜிஎஸ்டியில் வந்த முக்கிய மாற்றம்.. அதிரடியாக விலை உயரும் பொருட்கள்.. பட்டியல் இதோ
- ஐடிபிஐ வங்கியில் கார் கடனுக்கு 8.3 சதவிகிதம் வட்டி நிர்ணயித்துள்ளது. இதற்கு மாதத் தவணையாக ரூ.20,661 செலுத்த வேண்டியிருக்கும்.
- ஆக்சிஸ் வங்கியில் கார் கடனுக்கு வட்டியாக 9.15 சதவிகிதம் நிர்ணயித்துள்ளது. மேலும் மாதத் தவணை ரூ.20. 831 செலுத்த வேண்டியிருக்கும்.
- எச்டிெஃப்சி வங்கியில் கார் கடனுக்கு 9.4 சதவிகிதம் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு மாதத் தவணையாக ரூ.20, 953 செலுத்த வேண்டியிருக்கும்.
வாகன விலை குறைவுடன் வட்டி சலுகைகளும் கிடைத்துள்ளதால், கார் வாங்க விரும்புபவர்களுக்கு இது மிக சரியான நேரமாகும். எனினும் கடன் பெறுவதற்கு முன் வங்கிகளின் வட்டி விகிதம், மாதத் தவணை, மறைமுக கட்டணம், விதிமுறைகள் ஆகியவற்றை நன்கு படித்து தெரிந்து கொண்டு முடிவெடுப்பது நல்லது.