Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஜிஎஸ்டி - GST

ஜிஎஸ்டி - GST

ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) இந்திய அரசாங்கத்தால் ஜூலை 1, 2017 அன்று செயல்படுத்தப்பட்டது. இந்த வரி ஒரு முக்கியமான மறைமுக வரி முறையாகும், இதை அரசாங்கமும் பல பொருளாதார வல்லுநர்களும் சுதந்திரத்திற்குப் பிறகு மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்று வர்ணித்துள்ளனர். இதன் அமலாக்கத்தின் மூலம், மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளால் வெவ்வேறு விகிதங்களில் விதிக்கப்படும் பல்வேறு வரிகளை நீக்கி, நாடு முழுவதும் ஒரே மறைமுக வரி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரி முறையை அமல்படுத்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் இந்திய நிதியமைச்சரால் தலைமை தாங்கப்படுகிறது. ஜிஎஸ்டியின் கீழ், பொருட்கள் மற்றும் சேவைகள் பின்வரும் விகிதங்களில் வரி விதிக்கப்படுகின்றன, 0%, 5%, 12%, 18% மற்றும் 28%. ஜிஎஸ்டியில் 4 வகைகள் உள்ளன. சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, யுடிஜிஎஸ்டி மற்றும் ஐஜிஎஸ்டி. எந்தவொரு வணிகமும் அரசாங்க போர்டல் மூலம் ஜிஎஸ்டிக்கு ஆன்லைனில் பதிவு செய்யலாம். ஜிஎஸ்டி சேவை மையத்தைப் பார்வையிட்டும் பதிவு செய்யலாம்.

Read More

ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்ப்பு… கடும் சரிவை சந்திக்கும் கார் விற்பனை

Car Sales Drop : பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி விரிவிதிப்பில் மாற்றங்கள் வர உள்ளதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக இந்தியாவில் கார் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளது. மக்கள் கார்களுக்கான ஜிஎஸ்டி குறையும் என எதிர்பார்ப்பதே இதற்கு காரணம்.

GST : ஷாம்பூ முதல் ஹைபிரிட் கார்கள் வரை.. ஜிஎஸ்டி மாற்றத்தால் அதிரடியாக குறையபோகும் விலை?

Diwali GST Changes | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாமானிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வரும் என பிரதமர் அறிவித்தார். அதன்படி, ஷாம்பூ முதல் ஹைபிரிட் கார்கள் வரை விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

GST 2.0: ஜிஎஸ்டி 2.0.. பால், பட்டர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறையுமா?

GST Cut Expected | தீபாவளி பண்டிகையை முன்னிட்டி ஜிஎஸ்டி வரி விதிப்பில் முக்கிய மாற்றம் வரும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் வரியை 12%-ல் இருந்து 5% ஆக குறைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கேபிள் டிவி கட்டணம் குறையுமா? ஜிஎஸ்டியை குறைக்க கோரிக்கை

GST Update : கேபிள் டிவி சேவைக்கான ஜிஎஸ்டியை 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சகத்துக்கு கேபிள் டிவி சங்கங்கள் கோரிக்கைவிடுத்துள்ளன. இதனால் கேபிள் டிவி கட்டணம் குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது.

ஜிஎஸ்டி வரியில் வரும் மாற்றம் – எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

GST Update: பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி வரியில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அறிவித்திருந்தார். இந்த மாற்றம் வருகிற தீபாவளிக்குள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. இந்த காரணமாக மளிகைப் பொருட்களின் விலை குறையுமா என பார்க்கலாம்.

ஜிஎஸ்டி குறைப்பு குறித்து வரவுள்ள முக்கிய அறிவிப்பு.. டிவி, ஏசி விலை குறையுமா?

GST Changes | தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் முக்கிய மாற்றம் வரும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இந்த நிலையில், ஜிஎஸ்டி குறைக்கப்படும் பட்சத்தில் ஏசி மற்றும் டிவி விலை குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர்.

ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸிற்கான ஜிஎஸ்டி 18% குறைய வாய்ப்பு?

GST Relief Move : பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து ஹெல்த் மற்றும் லைஃப் இன்சூரன்ஸிற்கான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடியாக குறையும் பைக் கார்களின் விலை? – ஜிஎஸ்டி குறித்து வெளியான தகவல்

GST Relief Ahead : இந்தியாவில் கார்கள், எஸ்யுவி ரக கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பைக் மற்றும் கார்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

GST : தீபாவளி பரிசாக குறையும் ஜிஎஸ்டி?.. பிரதமரின் அறிவிப்பு குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சகம்!

Important Changes in GST | ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஆகஸ்ட் 15, 2025) அறிவித்த நிலையில், அது குறித்து மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.