Year Ender 2025: அமலுக்கு வந்த ஜிஎஸ்டி 2.0 – அதிரடியாக குறைந்த கார், பைக் விலை
GST Reform : இந்த ஆண்டு மிகப்பெரிய மாற்றமாக ஜிஎஸ்டியில் இருந்த 4 விதமான வரி பிரிவுகள், 2 பிரிவுகளுக்கு கீழ் கொண்டு வரப்பட்டது. இதனால் கார், பைக்குகளின் விலை குறைந்ததால், அதன் விற்பனை கணிசமாக உயர்ந்தன. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜிஎஸ்டியில் (GST) கொண்டு வரப்பட்ட மாற்றங்கள், இந்த ஆண்டு மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரஷாதமாக அமைந்தது. கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இது மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது. இதன் மூலம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதனங்கள், கார்கள், பைக்குகள், காப்பீட்டு திட்டங்கள் விலைகள் குறைந்தன. முன்பு 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் என நான்கு வரிவுகள் ரத்து செய்யப்பட்டு 5 மற்றும் 18 என இரண்டு பிரிவுகளுக்குள் கொண்டு வரப்பட்டன. விலையுயர்ந்த பொருட்கள் 40 சதவிகிதத்திற்கு கீழ் கொண்டு வரப்பட்டன.
ஜிஎஸ்டியால் ஏற்பட்ட மாற்றங்கள்
புதிய ஜிஎடி 2.0 மூலமாக பல பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை குறைந்துள்ளது, உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ காப்பீடு, கார், பைக், டிவி, ஃபிரிட்ஜ் போன்ற மின் சாதனங்கள், ஸ்டேஷனரி பொருட்கள் போன்றவற்றின் விலை குறைந்தன. இதனால் மக்களின் மாதாந்திர பட்ஜெட் பெருமளவில் குறையும். குறிப்பாக கார், பைக்குகள் ஆகியவற்றின் விற்பனை பெருமளவு உயர்ந்தன.
இதையும் படிக்க : ஆதார் கார்டு நகல்கள் ரத்து செய்யப்படும்.. விரைவில் அறிமுகமாகும் புதிய விதிகள்!




ஜிஎஸ்டி 2.0 வரி அமலுக்கு வந்த நிலைில் கார்கள் மற்றும் பைக்குகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு 28 சதவிகிதமாக இருந்த கார் மற்றும் பைக்குகள் இப்போது 18 சதவிகிதம் ஜிஎஸ்டி பிரிவுக்கு மாற்றப்ப்டடன. இதன் மூல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8000 முதல் ரூ.1.5 வரை விலை குறைந்தன.
பைக்குகளைப் பொறுத்தவரை 100 சிசி முதல் 150 சிசி கொண்ட பைக்குகள் ரூ.3000 முதல் 8000 வரை விலை குறைந்தன. எலக்டிரிக் பைக்குகளுக்கு ரூ. 25000 வரை தள்ளுபடி கிடைத்தன. கார்களைப் பொறுத்தவரை ஹேட்ச்பேக் கார்களுக்கு ரூ20,000 முதல் ரூ.45,000 வரையும், செடான் மற்றும் மிட் ரேஞ்ச் எஸ்யூவிகளுக்கு ரூ. 40,0000 முதல் ரூ. 1, 00,000 வரை விலை குறைந்தன.
இதையும் படிக்க : 2026-ல் தான் ஆட்டமே இருக்கிறது.. தங்கம் விலை அதிரடியாக உயரும்.. ஷாக் கொடுக்கும் தரகு நிறுவனம்!
கிராமப்புறங்களில் பைக்குளின் விற்பனை அதிகரிப்பு
மேலும், சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்ததால், பைக், மற்றும் கார்களின் மாதாந்திர தவணையும் குறைந்தது. இதனால் நடுத்தர மக்களின் வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. சமீபத்திய ஆய்வின் படி, பைக்குகளின் விற்பனை கடந்த ஆண்டை விட 18 சதவிகிதமும், கார்களின் விற்பனை 22 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. அதே போல எலக்ட்ரிக் மற்றும் ஸ்கூட்டர்களின் விற்பனை 30 சதவிகிதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. விலை குறைந்த எஸ்யூவி பிரிவில் விற்பனை மிகவும் அதிகரித்திருக்கிறது.
ஜிஎஸ்டி குறைவால் கிராமப்புரங்களில் பைக் விற்பனை மிகவும் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக சிறு தொழில் செய்பவர்கள், டெலிவரி செய்பவர்கள் பைக்குகள் வாங்குவது அதிகரித்திருக்கறது. இதனால் கிராமப்புறங்களில் போக்குவரத்து மேம்பட்டுள்ளது. எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்குளின் விற்பனையும் கணிசமாக உயர்ந்துள்ளன.