இந்திய யூடியூபர் தர்மேந்திர பிலோடியா, தனது பெற்றோருக்கு அவர்களின் வாழ்க்கையில் முதன்முறையாக ஹெலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்து கொடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தர்மேந்திர பிலோடியா தனது அம்மா மற்றும் அப்பா இருவரின் நடுவில் நின்று, ஹெலிகாப்டர் பயணம் எப்படி இருந்தது? என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் மிக எளிமையாக நல்லா இருந்தது என்று சொல்கிறார்கள். இது பலரையும் நெகிழ வைத்துள்ளது. இந்த வீடியோவுக்கு தர்மேந்திர பிலோடியா எழுதிய கேப்ஷனும் அனைவரையும் கன்கலங்க வைத்துள்ளது.