Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீட்டில் இருந்தபடியே ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Aadhaar Mobile Number Update Online | முன்பெல்லாம் ஆதார் தொடர்பான சேவைகளை பெற இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், தற்போது இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் மிக சுலபமாக வீட்டில் இருந்தபடியே ஆதார் சேவைகளை பெறலாம்.

வீட்டில் இருந்தபடியே ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Dec 2025 15:06 PM IST

இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்டு (Aadhaar Card) மிக முக்கிய ஆவணமாக உள்ளது. அரசின் சேவைகளை பெற, பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்த என பலவற்றுக்கு ஆதார் மிக முக்கிய ஆவணமாக உள்ளது. எனவே ஆதாரில் உள்ள பெயர், முகவரி, வயது, பாலினம், பிறந்த தேதி இவற்றில் ஏதேனும் ஒன்றில் பிழை இருக்கும் பட்சத்தில் பல சேவைகளை பெற முடியாமல் போய்விடும். எனவே தான் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களும் மிக் சரியானதாகவும், மிகவும் துல்லியமானதாகவும், பான் கார்டு (PAN Card) உள்ளிட்ட ஆவணங்களுடன் ஒத்துப்போகும் வகையிலும் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.

வீட்டில் இருந்தபடியே ஆதார் சேவைகளை மிக சுலபமாக பெறலாம்

முன்பெல்லாம் ஆதார் கார்டில் ஏதேனும் விவரங்களை மாற்ற வேண்டும் என்றால் இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், தற்போது அதெற்கெல்லாம் தேவையே இல்லை. ஆதார் செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே மிக சுலபமாக செய்து முடித்துவிடலாம். இந்த நிலையில் ஆதார் மொபைல் செயலி மூலம் ஆதார் கார்டில் உள்ள செல்போன் எண்ணை வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Credit Card : கிரெடிட் கார்டு மோசடி நடைபெற்றால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷ்யங்கள் இதுதான்!

வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை மாற்றுவது எப்படி?

  1. அதற்கு முதலில் ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து லாக் இன் செய்ய வேண்டும்.
  2. பிறகு அதில் கொடுக்கப்பட்டு இருக்கும் மை ஆதார் அப்டேட் (My Aadhaar Update) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதனை கிளிக் செய்யும் பட்சத்தில் மொபைல் எண், முகவரி, பெயர், இ மெயில் ஆகியவற்றை மாற்றம் செய்வதற்கான ஆப்ஷன்கள் தோன்றும்.
  4. அதில் மொபைல் எண் மாற்றத்துக்கான ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  5. பிறகு நீங்கள் எந்த மொபைல் எண்ணை மாற்ற நினைக்கிறீர்களோ அதனை மாற்றம் செய்து ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டும்.

இதையும் படிங்க : Provident Fund : அதிரடியாக உயரப்போகும் பிஎஃப் வட்டி.. வெளியான முக்கிய தகவல்!

இந்த முறையை பின்பற்றி மொபைல் எண்ணை மாற்றும் பட்சத்தில் 10 முதல் 15 நாட்களுக்குள்ளாக உங்களது மொபைல் எண் மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.