Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
Aadhaar Card

Aadhaar Card

மத்திய அரசால் கடந்த 2009 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் இந்தியர்களுக்கான முதன்மையான அடையாள அட்டையாக விளங்குகிறது. இதில் ஒருவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி, கைரேகை முக அடையாளம் உள்ளிட்டவையுடன் 12 இலக்க எண்களும் கொடுக்கப்பட்டிருக்கும். அரசின் அனைத்து வகையான சேவைகள், நிதி உதவிகள், எல்பிஜி மானியங்கள்,கல்வி உதவித் தொகை போன்ற பல சேவைகளுக்கு ஆதார் முக்கியமான ஆதாரமாக விளங்குகிறது. மேலும் வங்கி சேவை, பான் கார்டு சேவை போன்ற பிற தேவைகளுக்கும் ஆதார் முக்கியம். ஒவ்வொரு தேவைகளுக்கும் தனித்தனி அடையாள அட்டையை எடுத்து செல்லும் நிலையை மாற்றி அனைத்துவிதமான சேவைகளுக்கும் ஒரே அடையாள அட்டையாக ஆதார் மாறியிருப்பதால் மக்களின் தேவைகளை எளிதாக மாற்றியிருக்கிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய தூணாகவும் ஆதார் அமைகிறது. ஆதார் கார்டு என்பது இன்று ஒவ்வொரு இந்தியர்களுக்கும் அடையாள அடிப்படையாக இருப்பதுடன், அரசின் பல்வேறு சேவைகளையும் பாதுகாப்பாக, விரைவாக, நேரடியாக பெற உதவுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதாரின் புதிய மாற்றங்களை உறுதி செய்து புதுப்பித்துக் கொண்டு இருப்பது மிகவும் அவசியம்.

Read More

ஆதார் கார்டு நகல்கள் ரத்து செய்யப்படும்.. விரைவில் அறிமுகமாகும் புதிய விதிகள்!

Aadhar Card Copy Ban | விடுதிகள், மருத்துவமனைகள், பள்ளி மற்றும் கல்லூரிகள் என பெரும்பாலான இடங்களில் ஆதார் சரிப்பார்ப்பு கட்டாயமாக உள்ளது. இதன் காரணமாக ஆதாரை நகல் எடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த முறை முற்றிலுமாக நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீட்டில் இருந்தபடியே ஆதாரில் மொபைல் எண்ணை மாற்றலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Aadhaar Mobile Number Update Online | முன்பெல்லாம் ஆதார் தொடர்பான சேவைகளை பெற இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், தற்போது இணையதளம் மற்றும் செயலிகள் மூலம் மிக சுலபமாக வீட்டில் இருந்தபடியே ஆதார் சேவைகளை பெறலாம்.

December Changes : கேஸ் சிலிண்டர் விலை முதல் பான் கார்டு வரை.. டிசம்பரில் வர உள்ள முக்கிய மாற்றங்கள்!

December 2025 Changes | ஒவ்வொரு மாதமும் ஆதார் கார்டு முதல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் வரை பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், 2025, டிசம்பர் மாதத்தில் வர உள்ள முக்கிய மாற்றங்கள் குறித்துன் விரிவாக பார்க்கலாம்.

இனி மோசடி, ஸ்பேம் கால்கள் குறித்து கவலை இல்லை.. ஆதாரை மையப்படுத்தி அசத்தல் அம்சத்தை சோதனை செய்யும் அரசு!

Aadhaar-Linked Caller ID | இந்தியாவில் ஸ்பேம் மற்றும் மோசடி போன் கால்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவற்றை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதனால் ஏற்படும் மோசடிகளை தடுக்கவும் அரசு ஒரு அற்புதமான முயற்சியை கையில் எடுத்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அறிமுகமானது இ ஆதார் செயலி.. இத்தனை சிறப்பு அம்சங்களா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

UIDAI Introduced e Aadhaar App | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இ ஆதார் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய செயலியின் மூலம் இ சேவை மையங்களுக்கு சென்று செய்த வேலைகளை ஸ்மார்ட்போன் மூலம் வீட்டில் இருந்தபடியே செய்துக்கொள்ளலாம்.

New Aadhaar App: மத்திய அரசு பலே திட்டம்! அறிமுகமான புதிய ஆதார் ஆப்.. இதன் சிறப்பம்சங்கள் என்ன?

UIDAI New Aadhaar App: UIDAI-யின் mAadhaar ஆப் தற்போது வரை பயன்பாட்டில் இருக்கிறது. இருப்பினும், இது விவரங்களைப் பார்ப்பது, e-Aadhaar பதிவு செய்வது என மட்டுமே இருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய ஆப்பில், பயனர்கள் இப்போது தங்கள் ஆதார் தகவல்களைப் பாதுகாப்பாக சேமித்து QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

Aadhaar : இனி ஆதாரில் மிக சுலபமாக பெயர், பிறந்த தேதியை மாற்றலாம்.. விரைவில் வரும் இ ஆதார் செயலி!

e Aadhaar App Coming Soon | ஆதாரில் பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவற்றை மாற்றம் செய்ய பயனர்கள் இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், பயனர்கள் வீட்டில் இருந்தபடியே விவரங்களை மாற்றம் செய்ய இ ஆதார் சேவை விரைவில் அறிமுகமாக உள்ளது.

Aadhaar Card : ஆதார் சேவையில் வரவுள்ள முக்கிய மாற்றங்கள்.. UIDAI அறிவிப்பு!

UIDAI New Aadhaar Rules 2025 | இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டில் உள்ள விவரங்களும் மிக துல்லியமாக இருக்க வேண்டும். இந்த நிலையில், ஆதார் சேவைகளில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

Aadhaar Card : பயோமெட்ரிக் அப்டேட்.. ஒரு ஆண்டுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம்.. UIDAI அசத்தல் அறிவிப்பு!

Aadhaar Biometric Update for Free | ஆதாரில் உள்ள பயொமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்ய ரூ.125 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், 7 முதல் 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அடுத்த ஒரு ஆண்டுக்கு இலவசமாக பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துக்கொள்ளலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

Aadhaar Card : ஆதார் சேவைகளுக்கான கட்டணம் உயர்வு.. அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது!

Aadhaar Services Charges Hikes | ஆதார் கார்டில் சில சேவைகளை பெற வேண்டும் என்றால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நிலையில், ஆதார் சேவைகளை பெறுவதற்கான கட்டணத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு அக்டோபர் 1, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது.

வீட்டில் இருந்தே சேவைகளை பெற வந்தாச்சு mAadhaar செயலி.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

How to Download mAadhaar App | ஆதார் கார்டில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் என்றால் இ சேவை மையங்கள் அல்லது இணையதளத்தை நாட வேண்டிய தேவை உள்ளது. இந்த நிலையில் தான் பொதுமக்களின் சுமையை குறைக்கும் வகையில் அரசு எம் ஆதார் செயலியை அறிமுகம் செய்துள்ளது.

ஏன் ஆதார் இந்திய குடியுரிமைக்கான சான்று இல்லை? காரணம் என்ன?

Aadhaar Clarification by UIDAI: இந்தியாவில் ஒருவரின் பொதுவான அடையாள ஆவணமாக ஆதார் விளங்குகிறது. ஆனால் ஆதார் கார்டு ஒருவரின் குடியுரிமைக்கான சான்றாக இருக்காது என இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். அது குறித்து விளக்கமாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

e Aadhaar App : அனைத்து ஆதார் சேவைகளும் ஒரே செயலியில்.. அசத்தல் அம்சங்களுடன் விரைவி வருது இ ஆதார் செயலி!

e Aadhaar App | ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ள நிலையில், அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் மிக சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக ஆதாரில் ஏதேனும் சிக்கல் என்றால் பொதுமக்கள் இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

Aadhaar Card : பெயர் முதல் முகவரி வரை.. ஆதார் கார்டில் இனி அனைத்து விவரங்களையும் சுலபமாக அப்டேட் செய்யலாம்!

Aadhaar Update Online | ஆதார் கார்டில் இருக்கும் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக முகவரி மாறினாலோ, அல்லது வேறு ஏதேனும் தகவல்களை மாற்ற வேண்டும் என்றாலோ பொதுமக்கள் இ சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் மிக விரைவாக ஆதார் சேவை பெற ஒரு அம்சத்தை அரசு அறிமுகம் செய்ய உள்ளது.

குழந்தைகளின் ஆதார் கார்டில் உடனடியாக இத பண்ணுங்க.. இல்லனா ரத்து செய்யப்படலாம்.. UIDAI முக்கிய தகவல்!

UIDAI New Announcement | ஆதார் கார்டு தொடர்பான முக்கிய அறிவிப்புகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதை செய்ய தவறும் பட்சத்தில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டு ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.