AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஆதார் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம்.. விரைவில் வர உள்ள அசத்தல் அம்சம்!

New Features To Be Introduced In Aadhaar Card | இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது. ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் பாதுகாப்பாக இருக்க அரசு புதிய அம்சத்துடன் கூடிய அதார் கார்டை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி ஆதார் பாதுகாப்பு குறித்த கவலை வேண்டாம்.. விரைவில் வர உள்ள அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 20 Feb 2026 16:50 PM IST

இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஆதார் கார்டு சமர்ப்பிக்க படும் நிலையில், அதில் உள்ள தகவல்கள் மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களின் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பல விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், ஆதாரின் பாதுகாப்பை அதிகரிக்கும் விதமாக சில முக்கிய மாற்றங்களை அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் விவரங்கள் திருடப்படும் அபாயம்

இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் கார்டு உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) வழங்கும் இந்த ஆதார் கார்டில் 12 இலக்க எண், பெயர், முகவரி, வயது, பாலினம், கைரேகை மற்றும் கண் ரேகை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல், முதியோர் உதவித்தொகை வாங்குவது வரை என அனைத்து இடங்களில் ஆதார் கட்டாயம் கோரப்படுகிறது. இவ்வாறு அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கார்டை வழங்கும் நிலையில், அதில் இருக்கும் தகவல்கள் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க தான் அரசு புதிய அப்டேட்டுகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது.

இதையும் படிங்க : 2026-2027 நிதியாண்டுக்கும் 8.25% வட்டி தானா?.. இபிஎஃப்ஓ குறித்து வெளியான முக்கிய தகவல்!

ஆதாரில் புதிய மாற்றங்களை மேற்கொள்ளும் மத்திய அரசு

அதாவது, ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள், புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க ஆதாரில் புகைப்படம், முகவரி உள்ளிட்டவை இருக்காத வகையில் புதிய ஆதார் கார்டை அறிமுகம் செய்ய இந்திய தனித்துவ அடையாள ஆணையம் திட்டமிட்டு வருகிறது. தற்போது வாழங்கப்படும் ஆதார் கார்டில் ஒருவரின் தனிப்பட்ட விவரங்களான பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உள்ளன. இதனால் மோசடி அபாயங்கள் அதிகமாக உள்ள நிலையில், வெறும் புகைப்படம் மற்றும் கியூஆர் (QR – Quick Response) கோடு மட்டுமே அடங்கிய அட்டையை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : PAN : வீட்டில் இருந்தே புதிய பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

இந்த புதிய ஆதார் கார்டில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்யும் பட்சத்தில் அந்த நபரின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பெற முடியும். இந்த புதிய அம்சம் விரைவில் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow Us