AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் வரும்.. ரஷ்யாவின் முடிவு எதிரொலிக்கும்.. வல்லுநர்கள் கூறுவது என்ன?

Gold Price Will Go Down From 1 Lakh In India | இந்தியாவில் தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.1,15,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், விரைவில் இந்தியாவில் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Feb 2026 23:00 PM IST
கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கம் கடும் உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக தங்கம் சாமானியர்களின் எட்டா கனியாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவியது. இந்த நிலையில், ஜனவரி 29, 2026 தொடர்ந்து தங்கம் விலை சரிய தொடங்கியது. இந்த நிலையில், தங்கம் தற்போது சீரான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

1 / 5
தற்போதைய நிலவரப்படி சென்னையில் 22 காரட் தங்கம் ஒரு சவரன் ரூ.1,15,000-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், விரைவில் இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் விற்பனை செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  ரஷ்யா எடுத்துள்ள முடிவு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 / 5
புவிசார் பதற்றம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு ஆகியவை தங்கம் கடும் உச்சத்தில் இருக்க வழிவகை செய்த நிலையில், தற்போது தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருந்த முக்கிய காரணிகள் அனைத்தும் தணிந்துவிட்டதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமன்றி ரஷ்யாவின் முக்கிய முடிவும் தங்கம் விலை குறைவதற்கு காரணமாக அமையலாம் என கூறப்படுகிறது.

3 / 5
அதாவது, சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் அமெரிக்க டாலரை பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி குறிப்பிட்டுள்ள நிலையில், தங்கத்தின் விலை பெருமளவு சரியும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். ரஷ்யா மீண்டும் அமெரிக்க டாலர் அடிப்படையிலான வர்த்தகத்தை மேற்கொள்ளும் நிலையில், டாலரின் மதிப்பு வலுவடையும். இதன் மூலம் இந்தியாவில் தங்கம் ரூ.1 லட்சத்திற்கு கீழ் விற்பனை செய்யப்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

4 / 5
முன்னதாக அமெரிக்க டாலரை வலுவிழக்க செய்வதற்காக சீனா உள்ளிட்ட சில உலக நாடுகள் தங்கத்தை அதிக அளவு வாக்கி குவித்தன. டிரம்பின் பொருளாதார தடைகளை எதிர்த்து உலக நாடுகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், தற்போது ரஷயா எடுத்துள்ள இந்த முடிவு உலக வர்த்தகத்தையே மாற்றி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

5 / 5
Follow Us