AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காலமானார் செஃப் தாமு… யார் இந்த சமையல் கலைஞர் – சமையல் துறையில் ஜொலித்தது எப்படி?

Chef Damu Passed Away Due To Ill Health | சமையல் துறையில் பல சாதனைகளைப் படைத்தவர் செஃப் தாமு. இவர் சமையல் துறையில் செய்த பல சாதனைகளுக்காக மத்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காலமானார் செஃப் தாமு… யார் இந்த சமையல் கலைஞர் – சமையல் துறையில் ஜொலித்தது எப்படி?
செஃப் தாமுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Oct 2026 11:02 AM IST

தமிழக மக்களிடையே சினிமா பிரபலங்கள் எந்த அளவிற்கு பரிச்சையம் உள்ளதோ அதே அளவில் ஒரு சில சமையல் கலைஞர்களும் பரிச்சையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த ஒரு சில சமையல் கலைஞர்களில் முக்கியமானவர்தான் செஃப் தாமு (Chef Damu). இவர் சமையல் கலையில் பல சாதனைகளை செய்து தமிழக மக்களை உலக அளவில் பெருமை சேர்த்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழக மக்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்டு வரும் இந்த செஃப் தாமு சமையல் கலையில் செய்த சாதனைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த செஃப் தாமு இன்று காலமானார். இவருக்கு வயது 72 ஆகிறது. இந்த செய்தி தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமையலில் கின்னஸ் சாதனை செய்த செஃப் தாமு:

ஒவ்வொரு துறையில் பலர் பலவிதமான கின்னஸ் சாதனைகளைப் படைத்து வந்த போது தான் சிறந்து விளங்கும் சமையல் துறையின் மூலம் கின்னஸ் சாதனையை செய்ய நினைத்தார் செஃப் தாமு. அதன் தொடர்ச்சியாக கடந்த டிசம்பர் 2010-ம் ஆண்டு 24 மணி நேரம், 30 நிமிடங்கள் மற்றும் 12 வினாடிகள் தொடர்ந்து சமையல் செய்து, ​​மொத்தம் 190 கிலோகிராம் எடையுள்ள 617 உணவுகளைச் சமைத்து சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் கிடைத்த வரவேற்பு:

சின்னத்திரையில் பல சேனல்களில் பல சமையல் நிகழ்ச்சிகளில் செஃப் தாமு கலந்துகொண்டு இருந்தாலும் அவருக்கு அதிக அளவில் புகழைத் சேர்ந்தது இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். கடந்த 2019-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் முதல் சீசன் ஒளிபரப்பானதில் இருந்து இறுதியாக இந்த 2026-ம் ஆண்டு ஒளிபரப்பான 7-வது சீசன் வரை செஃப் தாமு தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் உலக அளவில் பல ரசிகர்களை செஃப் தாமு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மஸ்ரீ விருதிற்கு சொந்தக்காரர் செஃப் தாமு:

தொடர்ந்து சமையல் கலையில் பல சாதனைகளைப் படைத்து இந்திய அளவில் மக்களிடையே தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வந்தவர் செஃப் தாமு. சமையல் கலையில் இவர் செய்த சாதனைகளை கொண்டாடும் விதமாக மத்திய அரசு கடந்த 2025-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதினை அளித்து கௌரவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த விருது அவரது கலைக்கு கொடுத்த மரியாதை என்றும் மக்கள் தெரிவித்தனர்.

Also Read… Rukmini Vasanth: கனம் பட இயக்குநருடன் புதிய தமிழ் படத்தில் இணைந்த ருக்மிணி வசந்த்!

உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட செஃப் தாமு:

உடல் எடை அதிகமாக இருந்த போதும் செஃப் தாமு நன்றாகவே நடமாடிக் கொண்டு இருந்தார். ஆனால் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு சிறிய விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதில் கீழே விழுந்த செஃப் தாமுவிற்கு காலில் அடிபட்ட நிலையில் வால்க்கிங் ஸ்டிக் இல்லாமல் அவரால் நடக்க முடியவில்லை. இதன் காரணமாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அமர்ந்தபடியே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார் செஃப் தாமு. 72 வயதாகும் செஃப் தாமு இன்று உடல் நலக் குறைவால் காலமனா செய்தி தமிழக மக்களிடையே மட்டும் இன்றி உலக அளவில் உள்ள அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… பிக்பாஸில் இந்த வாரம் விஜய் சேதுபதிக்கு பதிலாக வரும் பிரபல நடிகை… வைரலாகும் தகவல்

Follow Us