11 ஆண்டுகளை நிறைவு செய்தது 10 எண்றதுக்குள்ள படம்… இயக்குநர் விஜய் மில்டன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு!
11 Years Of 10 Endrathukulla Movie | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் விஜய் மில்டன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான 10 எண்றதுக்குள்ள படம் இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை இயக்குநர் விஜய் மில்டன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 1997-ம் ஆண்டு முதல் ஒளிபதிவாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் விஜய் மில்டன். இவர் தொடர்ந்து பல ஹிட் படங்களுக்கு ஒளிபதிவாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒளிபதிவாளராக பணியாற்றி வந்த விஜய் மில்டன் (Vijay Milton) கடந்த 2006-ம் ஆண்டு வெளியான அழகை இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த நிலையில் அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பலப் படங்களை இயக்கி உள்ளார். தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த 21-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் 10 எண்றதுக்குள்ள படம்.
இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை சமந்தா ரூத் பிரபு நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது குறித்து இயக்குநர் விஜய் மில்டன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




11 ஆண்டுகளை நிறைவு செய்தது 10 எண்றதுக்குள்ள படம்:
அதன்படி இயக்குநர் விஜய் மில்டன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, சியான் சார், அந்த காலக்கட்டத்தை ஒரு இனிய கனவாக மாற்றியமைத்ததற்கு நன்றி! இன்றும் கூட, ஒரு அழகான சாகசத்தை நினைவுகூரும் குழந்தையைப் போலவே, அதே உற்சாகத்துடனும், அன்போடும், வியப்போடும் நான் அந்த நாட்களைத் திரும்பிப் பார்க்கிறேன். 11 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனாலும் அதை நினைக்கும்போது இன்றும் என் முகத்தில் புன்னகை மலர்கிறது!
சமந்தா பிரபு, என் மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கைக்கு நன்றி; அதேபோல், நீங்கள் கொண்டிருந்த சந்தேகங்களுக்கும் நன்றி! இவை இரண்டுமே அந்த அழகான பயணத்தின் அங்கங்கள்தாம். நம்முடைய ‘காட்கி’ (GATKHI) நினைவுகள் இன்னும் பசுமையாக இருக்கின்றன; அப்போது நாம் உங்கள் ஆளுமையின் வேறொரு பரிமாணத்தை ஆராய்ந்து கொண்டிருந்தோம். அந்தப் பயணத்தைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது, சாம் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… ஜூனியர் என்டிஆர் இல்ல.. நெல்சன் இணையும் அடுத்த நடிகர் இவரா?
இயக்குநர் விஜய் மில்டன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#11yearsof10Endrathukulla
Thank you, @chiyaan sir, for making that period such a sweet dream.Even today, when I look back like a child remembering a beautiful adventure.With the same excitement,affection &wonder. 11 years, and it still brings a smile! ❤️ https://t.co/pmQiIqoF1y— sd.vijay milton (@vijaymilton) October 21, 2026
Also Read… Scene Movie: அடி எரோபிளேன போல… சூர்யா – நஸ்ரியாவின் சீன் படத்தின் 2வது பாடல் வெளியீடு!