AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அட அதுக்குள்ள சண்டை ஆரம்பிச்சுடுச்சா… பிக்பாஸில் மோதிக்கொள்ளும் அக்‌ஷிதா – அஸ்மிதா… வைரலாகும் வீடியோ

Bigg Boss Tamil Season 10 | பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இதுவரை 42 நாட்கள் முடிவடைந்து தற்போது 43-வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் இன்றைய நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டு உள்ளது.

அட அதுக்குள்ள சண்டை ஆரம்பிச்சுடுச்சா… பிக்பாஸில் மோதிக்கொள்ளும் அக்‌ஷிதா – அஸ்மிதா… வைரலாகும் வீடியோ
பிக்பாஸ் தமிழ் சீசன் 10Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Oct 2026 12:36 PM IST

தமிழ் சின்னத்திரையில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 10. இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து தொடர்ந்து 6 வாரங்கள் முடிவடைந்து தற்போது 7-வது வாரத்தை எட்டியுள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். ஒவ்வொரு வாரமும் புதுப் புது டாஸ்குகள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அந்த டாஸ்குகள் அனைத்தும் போட்டியாளர்களுக்கு மட்டும் இன்றி பார்வையாளர்களுக்கும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. அதன்படி கடந்த வாரம் நடைப்பெற்ற டாஸ்கில் சிறப்பாக விளையாடிய டிடிஎஃப் வாசனுக்கு எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த சீசனில் தற்போது 3 நபர்களிடம் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த 7-வது வாரத்தில் பிக்பாஸ் தமிழ் சிசன் 10 நிகழ்சியில் சர்வைவல் பேட்டல் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடுகின்றனர். அதில் ஒரு அணியினர் நீல நிறமும் மற்றொரு அணியினர் சிகப்பு நிற உடையையும் அணிந்து விளையாட்டை தொடங்கி உள்ளனர்.

பிக்பாஸில் மோதிக்கொள்ளும் அக்‌ஷிதா – அஸ்மிதா… வைரலாகும் வீடியோ:

இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த 43-வது நாளிற்கான இரண்டாவது புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. அதில் நீல அணியில் உள்ள அஸ்மிதாவிற்கும் சிவப்பு அணியில் உள்ள அக்‌ஷிதாவிற்கும் இடையே சண்டை ஏற்படுகின்றது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த சண்டை மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய சண்டைகள் இந்த வார டாஸ்கில் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… றெக்க மட்டும் இருந்தா தேவதை சார்… 9 ஆண்டுகளைக் கடந்தது மேயாத மான் படம் – இயக்குநர் ரத்னகுமார் வெளியிட்ட பதிவு!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் எவிக்டாவது இவரா? வைரலாகும் தகவல்!

Follow Us