ஜூனியர் என்டிஆர் – நெல்சன் கூட்டணி.. சூசகமாக சொன்ன தயாரிப்பாளர் நாக வம்சி!
Nelson And Jr NTR Collaboration: தெலுங்கு சினிமாவில் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்துவருபவர் நாக வம்சி. இவரின் தயாரிப்பு நிறுவனம்தான் சித்தாரா என்டேர்டைமென்ட். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், நெல்சன் திலீப்குமார் மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணி குறித்து ஹின்ட் கொடுத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர்தான் ஜூனியர் என்டிஆர் (Jr NTR). இவர் தெலுங்கு மொழியில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் வார் 2 (War 2). இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்திற்கு பின் தற்போது கேஜிஎப் (KGF) மற்றும் சலார் (Salaar) போன்ற படங்களின் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் டிராகன் (Dragon) என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துவருகிறார்.
இந்த படத்திற்கு பின், தமிழ் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson Dilipkumar) இயக்கத்தில் புதிய படத்தில் இணைவதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவந்தது. இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் நாக வம்சி (Naga Vamsi), இந்த படம் உருவாகுமா என்பது குறித்து ஹின்ட் கொடுத்துள்ளார்.




இதையும் படிங்க: பிக் பாஸில் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுத்த நடிகர் விமல்.. டிடிஃஎப் வாசனுக்கு கிடைத்த எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்!
ஜூனியர் என்டிஆர் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணி குறித்து தயாரிப்பாளர்:
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் நாக வம்சி, ஜூனியர் என்டிஆர் மற்றும் நெல்சன் கூட்டணி குறித்து சூசகமாக பேசியுள்ளார். அதில் அவர், “இது ஒரு வெளிப்படையான ரகசியம், ஆனால் இதை சத்தமாகச் சொன்னால் கதாநாயகர்களிடம் எனக்குச் சிக்கல் வந்துவிடும். God Of War படமானது எவ்வாறு அமைகிறது என்பதைப் பொறுத்தே இறுதி வரிசை அமையும்” என அதில் அவர் கூறியுள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: திரைத்துறையில் நாயகனாக 36 ஆண்டுகளை நிறைவு செய்த விக்ரம்… கொண்டாடும் ரசிகர்கள்
நெல்சன் மற்றும் ஜூனியர் என்டிஆர் கூட்டணி குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி பேசியது தொடர்பாக வைரலாகும் பதிவு:
Producer #NagaVamsi has seemingly hinted at the #NTR and #Nelson collaboration 👀
– This is an open secret, but saying it out loud might get me into trouble with the heroes.
– The final lineup will depend on how #GodOfWar progresses.
#Jailer2 https://t.co/Q0vpRlC6K6— Movie Tamil (@_MovieTamil) October 17, 2026
தயாரிப்பாளர் நாக வம்சியின் சித்தாரா என்டேர்டைமெண்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் ஜூனியர் என்டிஆர்-ன் காட் ஆப் வார் என்ற திரைப்படமானது உருவாக்கப்படவுள்ளது. தற்போது ஜூனியர் என்டிஆர் டிராகன் படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் நிலையில், இதை முடித்தபிறகு இப்படத்தில் இணைவார். காட் ஆப் வார் படத்தை இயக்குநர் திரிவிக்ரம் இயக்கவுள்ள நிலையில், மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ளது. இதற்க்கு பிறகே நெல்சன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.