Dragon: ஜூனியர் என்டிஆர்-யின் பர்த்டே.. டிராகன் பட கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு!
Dragon Movie Glimpse: தெலுங்கு சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் இன்று 2026 மே 20ம் தேதியில் தனது 43வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். இந்நிலையில் இவரின் நடிப்பில் உருவாகிவந்த NTRNEEL படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகனாக இருந்தவருபவர் ஜூனியர் என்டிஆர் (Jr NTR). இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் என்ற நிலையில், இவருக்கு ரசிகர்களும் அதிகமாக உள்ளனர். இவர் இறுதியாக வார் 2 (War 2) படத்தில் ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தாக இவர் இயக்குநர் பிரஷாந்த் நீல் (Prashanth Neel) இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்திருந்தார். இந்த படமானது தாற்காலிகமாக NTRNEEL என அழைக்கப்பட்டவந்தது. இயக்குநர் பிரஷாந்த் நீல் ஏற்கனவே கேஜிஏஃப் 1 & 2, (KGF 1 &2) சலார் (Salaar) போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இந்த வரிசையில் இவர் புதிதாக இயங்கிவந்த படம்தான் NTRNEEL. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்துள்ளார்.
அந்த வகையில் 2026 மே 20ம் தேதியான இன்று, நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது 43வது வயது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவருகிறார். இவரின் பிறந்தநாளை இன்னும் ஸ்பெஷலாக்கும் வகையில், 4:35 நிமிடம் கொண்ட கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் NTRNEEL என அழைக்கப்பட்டுவந்த இப்படத்திற்கு டிராகன் என படக்குழு டைட்டில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் தனுஷுடன் பணியாற்றிய அனுபவம் – சாண்டி மாஸ்டர் பகிர்ந்த விஷயம்!
ஜூனியர் என்டிஆர்-யின் டிராகன் திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ குறித்த எக்ஸ் பதிவு:
#NTRNeel is #Dragon 🔥🔥🔥🔥🔥#DragonGlimpse
▶️ https://t.co/XYPh8Btw6j pic.twitter.com/eWnFc1dYkk
— Dragon (@DragonMovieOffl) May 19, 2026
டிராகன் திரைப்படமானது போதைப்பொருள் கடத்தல், வர்த்தக நிறுவனம் மற்றும் கேங்ஸ்டர்ஸ் தொடர்பான கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இப்படத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஹீரோவாக நடிக்க, நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படமானது முழுக்க அதிரடி ஆக்ஷன் மற்றும் காதல் போன்ற கலவையான திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருக்கும் நிலையில், அதில் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளார்கள் என தெரிகிறது.
இதையும் படிங்க: ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘இம்மார்ட்டல்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு – வீடியோவை வெளியிட்ட படக்குழு!
டிராகன் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும்:
ஜூனியர் என்டிஆர்-யின் டிராகன் திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இப்படத்திற்கு கேஜிஎஃப் 1 & 2 மற்றும் சலார் 1 போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்த ரவி பஸ்ரூதான் இசையமைத்துவருகிறார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் சிறப்பாக தயாராகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2027ம் ஆண்டு ஜூலை 11ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.