AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Immortal: ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘இம்மார்ட்டல்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு – வீடியோவை வெளியிட்ட படக்குழு!

Immortal Movie Shoot Wraps Up: சினிமாவில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவரை மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துவந்த திரைப்படம்தான் இம்மார்ட்டல். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியில் தொடங்கியிருந்த நிலையில், தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Immortal: ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘இம்மார்ட்டல்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு – வீடியோவை வெளியிட்ட படக்குழு!
இம்மார்டல் படப்பிடிப்பு நிறைவுImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 May 2026 15:43 PM IST

கோலிவுட் மக்கள் மத்தியில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் மிகவும் பிரபலமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 25 படங்களுக்கும் மேல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இறுதியாக வெளியாகியிருந்த திரைப்படம் என்றாலே அது ஹேப்பி ராஜ் (Happy Raj). இப்படமானது மார்ச் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஒரு வெற்றிப்படமாகவே அமைந்தது என்று கூறலாம். அந்த வகையில் இப்படத்தை அடுத்ததாக இவர் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் இம்மார்ட்டல் (Immortal). இப்படத்தை இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயங்கிவந்த நிலையில், ஏ.கே.பிலிம்ஸ் பேக்டரி என்ற படக்குழுவானது தயாரித்துவந்தது.

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துவந்தார். இப்படத்தின் ஷூட்டிங் பணியானது கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேல் நடைபெற்றுவந்த நிலையில், 2026 மே 18ம் தேதியோடு முழுமையாக நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவை நடிகர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: மல்யுத்த வீரனாக ராம் சரண்.. ரசிகர்களை கவர்ந்துவரும் பெத்தி படத்தின் அதிரடி ட்ரெய்லர்!

இம்மார்ட்டல் படத்தின் ஷூட்டிங் நிறைவு குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட வீடியோ பதிவு:

இந்த இம்மார்ட்டல் படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது பேண்டஸி ஹாரர் மற்றும் திரில்லர் நகைச்சுவை படமாக தயாராகிவருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துவரும் நிலையில், கடத்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் முதல் டீசர் வெளியாகியிருந்தது. இது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரீல் டு ரியல்! கோட் பட நம்பர் பிளேட்டை முதல்வர் விஜய்க்கு பரிசளித்த வெங்கட் பிரபு!

இம்மார்ட்டல் படத்தின் ரிலீஸ் எப்போது:

சமீபத்தில்தான் இம்மார்ட்டல் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் அதிகம் விஎஃப்எக்ஸ் மற்றும் பல கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கும் நிலையில், தற்போது எடிட்டிங் பணிகள் தீவிரமாக இருந்துவருகிறது. அந்த வகையில் இப்படத்தை வரும் 2026 ஆண்டு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதை பற்றிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us