Kayadu Lohar: இம்மார்ட்டல் படத்தில் கயாடு லோஹர் இணைந்தது இப்படிதான் – இயக்குநர் மாரியப்பன் சின்னா!
Director Mariyappan Chinna About Kayadu Lohar: தென்னிந்திய சினிமாவில் பிரபல இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கயாடு லோஹர். இவர் தமிழில் பல படங்ககளை தனது கைவசம் வைத்திருக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷின் இம்மார்ட்டல் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவர் நுழைந்தார் என்பது குறித்து இதன் இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியுள்ளார்.
கன்னட சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கயாடு லோஹர் (Kayadu Lohar). இவர் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த வகையில் இவருக்கு தமிழில் அறிமுக திரைப்படமாக அமைந்தது டிராகன் (Dragon). 2025ம் ஆண்டில் வெளியான இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியக நடித்து அசத்தியிருந்தார். இப்படத்தை அடுத்ததாக சிலம்பரசனுடன் (Silambarasan) படத்தில் ஒப்பந்தமான நிலையில், அப்படம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் (GV.Prakash Kumar) நடித்துவந்த படம்தான் இம்மார்ட்டல் (Immortal). இப்படத்தை அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா (Mariyappan Chinna) இயக்கியுள்ள நிலையில், இதைத் தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் தயாரித்துவருகிறார். இப்படம் ஹாரர், காதல் மற்றும் ரோமெண்டிக் கதைக்களத்தில் தயாராகியுள்ள நிலையில், சாம் சி.எஸ் இசையமைத்துவருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் முதல் டீசர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் மாரியப்பன் சின்னா, இப்படத்தில் கயாடு லோஹர் எப்படி கதாநாயகியாக நுழைந்தார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: காதலர் தினத்தை குறிவைக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படக்குழு… வைரலாகும் ரிலீஸ் தகவல்
கயாடு லோஹர் குறித்து பேசிய இயக்குநர் மாரியப்பன் சின்னா :
அந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் மாரியப்பன் சின்னா, “நான் கயாடு லோஹாரை “19த் செஞ்சுரி” என்ற படத்தில் மற்றும் சில கன்னடப் படங்களிலும் பார்த்திருக்கிறேன். அவரின் முகபாவங்கள் மிகவும் அருமையாக ஆடியன்ஸை சென்றடையும். மேலும் இம்மார்ட்டல் படத்தில் கயாடு மற்றும் ஜி.வி. பிரகாஷ் இருக்கும் காட்சிகளும் உண்மையிலே இதயத்தைத் தொடும். மேலும் கயாடு லோஹரின் எமோஷனல் சித்தரிக்கும் விதம் அழகாக இருக்கும்.
இதையும் படிங்க: அதிரடி படத்தில் டொவினோ தாமஸின் கேரக்டர் இதுதான்… வெளியானது போஸ்டர்
தற்போது அவர் பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். துணையுடன் ஒரு படம், துல்கர் சல்மானுடன் ஜோடியாக ஒரு படம் என பரபரப்பாக இருக்கிறார். இவ்வளவு புகழ் இருந்தபோதிலும், ஒவ்வொரு காட்சியும் சரியாக வருவதை உறுதிசெய்ய வேண்டும் என்ற வலுவான ஆசை அவருக்கு இன்னும் உண்டு” என அவர் அதில் வெளிப்படையாக பேசியிருந்தார்.
ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹரின் இம்மார்ட்டல் பட டீசர் பதிவு :
A million watched & The Immortality rises 🦇🩸#IMMORTAL Teaser out, Watch now 💥
Tamil : https://t.co/LguozD23FE
Kannada : https://t.co/aApGaOTeM1
Telugu : https://t.co/JHz7Y6YX0U
Hindi : https://t.co/9zNhrD1tgL…
Starring : @gvprakash & @11Lohar
Produced by:… pic.twitter.com/udsycT7fnr— Think Music (@thinkmusicindia) December 24, 2025
கயாடு லோஹரின் இம்மார்ட்டல் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படமானது இந்த 2026ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.