Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AA23 Movie: அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் AA23.. ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?

AA23 Shooting Update: உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் லோகேஷ் கனகராஜுடன் AA23 என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதன் அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகிறது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

AA23 Movie: அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் AA23.. ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது தெரியுமா?
AA23 திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Jan 2026 13:09 PM IST

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) போன்ற பல்வேறு உச்ச பிரபலங்களின் படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் இவர் தற்போது டிசி என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், புது படத்தில் இணைந்துள்ளார். அந்த படம்தான் AA23. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை (Allu Arjun) கொண்டு இப்படத்தை லோகேஷ் இயக்கவுள்ள நிலையில், இதை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வீடியோ கடந்த 2026 ஜனவரி 14ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் ஏற்கனவே அட்லீயின் (Atlee) AA22 படத்தில் நடித்துவரும் நிலையில், இப்படத்தை அடுத்தாக லோகேஷ் கனகராஜின் படத்தில் இணையவுள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என இணையதளங்களில் தகவல்கள் பரவிவருகிறது.

இதையும் படிங்க: சசிகுமாரின் ‘மை லார்ட்’ படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகிறது? அறிவிப்பு இதோ!

அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜின் AA23 படத்தின் ஷூட்டிங் அப்டேட்:

இந்த AA23 திரைப்படமானது லோகேஷ் கனகராஜின் LCU பட தொகுப்பில் ஒன்றாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதன் வீடியோவில் லியோ படத்தில் இடம்பெற்றிருந்த ஹைனா, கழுகு போன்ற உயிரினங்கள் மற்றும் சில காட்சிகள் காட்டப்பட்டிருந்த நிலையில், ஒருவேளை இப்படம் லியோ 2 படத்தின் கதையாக இருக்குமோ என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கும் நிலையில், கதாநாயகி யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதையும் படிங்க: கண்டிஷன் ஃபாலோ பண்ணுங்கடா டயலாக் வைத்தது ஏன்… நடிகர் ஜீவா விளக்கம்

எப்போதும்போல லோகேஷின் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்தான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எப்போது என ரசிகர்கள் எதிர்பாராது வரும் நிலையில், இந்த 2026ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படமானது தமிழ் – தெலுங்கு மொழி படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகவுள்ளதாம். தற்போது இப்படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக இருந்துவருகிறார்.

AA23 திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட அறிவிப்பு வீடியோ :

லோகேஷ் கனகராஜ் டிசி படத்தை முடித்த கையேடு கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்கவுள்ளதாக கூறிய நிலையில், தற்போது அல்லு அர்ஜூனுடன் படத்தில் இணைந்திருப்பது தமிழ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லோகேஷ் கனகராஜ் மனம் திறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.