AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திருச்சி குலுங்கட்டும்… திமுக வெல்லட்டும்” – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக இரண்டாவது மாநில மாநாட்டில், பேரறிஞர் அண்ணா தேர்தலில் போட்டியிடும் முடிவை கட்சி தொண்டர்களின் வாக்கெடுப்பின் மூலம் எடுத்தார். அதன் தொடர்ச்சியாக 1957 தேர்தலில் திமுக முதன்முறையாக களம் கண்டது. அந்த தேர்தலில் 15 பேர் சட்டமன்றத்திற்கும், 2 பேர் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.

“திருச்சி குலுங்கட்டும்… திமுக வெல்லட்டும்” – தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Mar 2026 11:50 AM IST

சென்னை, மார்ச் 7, 2026: திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “திருச்சி குலுங்கட்டும்… திமுக வெல்லட்டும்! சிறுகனூர் மாநாடு வரலாறு படைக்கட்டும்” எனக் கூறி தொண்டர்களை அழைத்துள்ளார். “‘All Roads Lead to Rome’ என்று சொல்வார்கள். அதுபோல இப்போது எல்லாச் சாலைகளும் மலைக்கோட்டை மாநகரமான திருச்சியை நோக்கி செல்கின்றன. கழக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு தலைமையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் திருச்சி நோக்கி பயணிக்க ஆயத்தமாகி வருகின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திராவிட மாடல் 2.0 ஆட்சி:

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த மாநாடு, திராவிட மாடல் 2.0 ஆட்சியை உருவாக்கும் உறுதியை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். மார்ச் 9 ஆம் தேதி சிறுகனூரில் நடைபெறும் மாநாட்டில் கருப்பு-சிவப்பு உடன்பிறப்புகளின் பெருங்கடல் போன்ற அணிவகுப்பு காணப்படும் எனவும் கூறியுள்ளார்.

1956 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற திமுக இரண்டாவது மாநில மாநாட்டில், பேரறிஞர் அண்ணா தேர்தலில் போட்டியிடும் முடிவை கட்சி தொண்டர்களின் வாக்கெடுப்பின் மூலம் எடுத்தார். அதன் தொடர்ச்சியாக 1957 தேர்தலில் திமுக முதன்முறையாக களம் கண்டது. அந்த தேர்தலில் 15 பேர் சட்டமன்றத்திற்கும், 2 பேர் நாடாளுமன்றத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும் ஸ்டாலின் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும் படிக்க: திருச்சியில் தவெக பிரம்மாண்ட மாநாடு? விஜய்யின் அதிரடி திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்..

மேலும், 1970 ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ உள்ளிட்ட ஐம்பெரும் முழக்கங்களை வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தித் திணிப்புக்கு எதிராகவும், தமிழை காப்பாற்றவும் திருச்சி மண் வரலாற்றுப் போராட்டங்களை கண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1.31 கோடி மகளிர் பயன்:

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் சிறுகனூரில் நடைபெற்ற மாநாட்டில் குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்ததை ஸ்டாலின் நினைவுபடுத்தினார். தற்போது அந்தத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள் என்றும் கூறினார்.

மேலும் படிக்க: சென்னை மின்வாரியம் அறிவிப்பு: மின்கட்டணம் செலுத்த முடியாது!

மேலும், தமிழ்நாட்டின் பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகநீதி ஆகிய துறைகளை மேம்படுத்தும் 7 அம்சத் திட்டங்கள் அப்போது அறிவிக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக தமிழ்நாடு 11.19% இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றம் அடையச் செய்ய திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்து அமைய வேண்டும் என்றும், அடுத்த கட்டமாக ‘தமிழ்நாடு 2030’ என்ற 14 முக்கிய திட்டங்களை அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இறுதியாக, “வரலாற்று வெற்றியைப் படைக்க வருக உடன்பிறப்பே… திருச்சி குலுங்கட்டும்… திமுக வெல்லட்டும்… சிறுகனூர் மாநாடு வரலாறு படைக்கட்டும்” என ஸ்டாலின் கடிதத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

Follow Us