திருச்சியில் தவெக பிரம்மாண்ட மாநாடு? விஜய்யின் அதிரடி திட்டம்.. பரபரக்கும் அரசியல் களம்..
Vijay's Master plan: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பிரசாரம், பொதுக்கூட்டம், மாநாடு என்று நடத்தி வருவதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது.
திருச்சி, மார்ச் 07: தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இந்த மாத இறுதியில் திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திருச்சியில் தவெக தலைவர் விஜய் நடத்தவுள்ள மாநாடு அந்த கட்சிக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என கருதுகிறார்கள். மேலும் இந்த மாநாட்டில் தவெக வேட்பாளர்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. திமுக, அதிமுக என பிரதான அரசியல் கட்சிகள் திருச்சியில் நடத்திய மாநாடு, பொதுக்கூட்டங்கள் அந்த கட்சிகளுக்கு எப்படி திருப்புமுனையை ஏற்படுத்தியதோ, அதேபோல் தங்களுக்கும் திருச்சி திருப்புமுனையை தரும் என்ற எதிர்பார்ப்பில் அடுத்தடுத்து ஒவ்வொரு அரசியல் கட்சிகளாக திருச்சியில் சங்கமித்து வருகின்றன.
இதையும் படிக்க: விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது.. த.வெ.க எதிர்க்கட்சியாக வர வாய்ப்பு உள்ளது – எம்.பி. ஜோதிமணி..
விரைவில் சட்டமன்ற தேர்தல்:
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே பிரசாரம், பொதுக்கூட்டம், மாநாடு என்று நடத்தி வருவதால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அந்தவகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் கடந்த மாதம் 21-ந் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில் 234 தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நிற்க வைத்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தினார்.




திமுக, தேஜகூ மாநாடு:
இதனைத்தொடர்ந்து, வரும் 9ஆம் தேதி திருச்சி சிறுகனூர் பகுதியில் திமுக மாநில மாநாட்டை நடத்துகிறது. சுமார் 10 லட்சம் பேர் திரளும் அளவுக்கு பிரம்மாண்டமாக இந்த மாநாடு நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பஞ்சப்பூர் அருகே மார்ச் 11ம் தேதி (புதன்கிழமை) பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் கலந்து கொண்டு பேச உள்ளனர். இவ்வாறு திருச்சியில் அடுத்தடுத்து முக்கிய பொதுக்கூட்டங்களும், மாநாடுகளும் நடக்க உள்ளன. மொத்தத்தில் போட்டிப் போட்டு பலத்தை நிரூபிக்கும் அரசியல் கட்சிகளால் கோடைக்காலத்துக்கு முன்பே திருச்சியில் அனல் பறக்க தொடங்கிவிட்டது.
இதையும் படிக்க: பெண்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிடும் தவெக தலைவர் விஜய் – வெளியான அறிவிப்பு
திருப்புமுனையை ஏற்படுத்திய திருச்சி:
திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர் முதன்முதலில் பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடம் நியாயம் கேட்டதும் இங்கு தான். அது மட்டுமல்ல, முதன்முதலில் 1957ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிடலாமா? வேண்டாமா? என கருத்து கேட்கப்பட்ட இடம் இதுதான். 1972ம் ஆண்டு திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர். முதன்முதலில் பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடம் நியாயம் கேட்டதும் இங்கு தான். இப்படி வரலாற்று பின்னணி ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் மையப் பகுதியில் திருச்சி மாவட்டம் அமைந்து இருப்பதாலும் தொண்டர்களை ஒருங்கிணைக்க வசதியாக இருக்கும் என்பதாலும் அரசியல் கட்சியினர் திருச்சியை தேர்வு செய்கிறார்கள்.