AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக் பாஸ் சீசன்10ல் பங்குபெறும் சின்னத்திரை பிரபலங்கள்.. அடடே இவர்களா?

Bigg Boss 10 contestants: தமிழ் சின்னத்திரை மக்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் சீசன் 10 தமிழில் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், எந்த போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அதில் அடிபடும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார் என பார்க்கலாம்.

பிக் பாஸ் சீசன்10ல் பங்குபெறும் சின்னத்திரை பிரபலங்கள்.. அடடே இவர்களா?
பிக் பாஸ் சீசன்10Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 04 Aug 2026 21:45 PM IST

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் பல்வேறு இந்திய மொழிகளில் ஒளிபரப்பாக்கப்பட்டுவருகிறது. தமிழில் இதுவரை சீசன் 9 வரை ஒளிபரப்பாகிரியிருந்தது. இறுதியாக வெளியான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளாராக நடிகை திவ்யா கணேஷ் வெற்றிபெற்றிருந்தார். இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி மாறும் அதற்கு முந்தைய சீசனிலிருந்து நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இந்த நிகழ்ச்சியை தொகுக்க தொடங்கிவிட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss 10) நிகழ்ச்சியானது எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படும் நிலையில், 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாம்.

இந்நிலையில் இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது. அதில் சில சின்னத்திரை நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளார்களாம் அது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க: இந்த வருஷம் என்னோட பர்த்டேவ கொண்டாடல.. ஆனால் – சூர்யா பகிர்ந்த விஷயம்!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்குபெறும் சின்னத்திரை போட்டியாளர்கள்:

விஜய் சேதுபதி தொகுப்பாளராக பணியாற்றும் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில், தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் 4 பேர் பங்குபெறுகிறார்களாம். நடிகைகள் ஜனனி அசோக்குமார், ஃபரீனா ஆசாத், குக் வித் கோமாளி புகழ், உமைர் லதீப் மற்றும் நடிகர் புவி அரசு போன்ற சின்னத்திரை பிரபலகங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதாக பெயர் அடிபடுகிறது. இவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுகிறார்களா அல்லது இல்லையா? என உறுதியாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் சீரியலியல் களமிறங்கும் கேப்ரியெல்லா.. அட அந்த ஹீரோவுக்கு ஜோடியாகவா?

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்குபெறும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்து வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by @cwc.verse

புதிய முறையில் உருவாகும் பிக் பாஸ் சீசன் 10 :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது. பொதுவாக இந்த நிகழ்ச்சியில் திறமையாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் பங்குபெறுவர்கள். ஆனால், இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சாதாரண சாமான்யர்களும் பங்குபெறுகிறார்களாம். ஆகையால் மற்ற பிக் பாஸ் சீசன்களை ஒப்பிடும்போது இந்த பிக் பாஸ் சீசன் 10 வித்தியாசமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us