பிக் பாஸ் சீசன் 10 தமிழ் எப்போது தொடங்குகிறது?- இணையத்தில் வைரலாகும் தகவல்!
Bigg Boss Tamil Season 10: தமிழ் சின்னத்திரை தொலைக்களாட்சிகளில் மிகவும் பிரபலமான ரியாளியொட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவதுதான் பிக் பாஸ். இறுதியாக பிக் பாஸ் சீசன் 9 தமிழ் ஒளிபரப்பப்பட்டு நிலையில், பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி (Star Vijay Tv) என்றாலே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள்தான் பிரபலம். இந்த தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்தி மொழியில் ஆரம்பத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, பின் ஸ்டார் குழுமம் மூலமாக மற்ற மொழிகளிலும் தொடங்கப்பட்டது.தமில்க்கில் கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், இதுவரை மொத்தமாக 9 சீசன்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து சீசன் 7 நிகழ்ச்சி வரை உலகநாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கிய நிலையில், பின் சீசன் 8 முதல் விஜய் சேதுபதி (Vijay sethupathi) தொகுப்பாளராக தொகுத்து வழங்கிவருகிறார்.
அந்த வகையில் இவரின் தொகுப்பில் இறுதியாக பிக் பாஸ் சீசன் 9 ஒளிபரப்பப்பட்டது. இந்த சீசன் கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில் நிறைவடைந்தது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 10 தமிழ் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், தற்போது அது குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: ஜன நாயகனில் அந்த காட்சிகளை விஜய் சார்தான் இயக்கியிருந்தார் – எச். வினோத் தெரிவித்த விஷயம்!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் எப்போது தொடங்கும் :
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வரும் 20276ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் ஒரே நேரத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்துவரும் நிலையில், பங்களா பதிவில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தொகுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஃபகத் பாசில் – பிரேம் குமார் படத்தின் கதை இப்படிதான் இருக்குமா? வைரலாகும் தகவல்
பிக் பாஸ் சீசன் 10 தொடக்கம் குறித்து வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
புது விதமாக உருவாகிவரும் பிக் பாஸ் சீசன் 10:
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார். இதற்காக சுமார் ரூ 60 கோடிகளுக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இந்த நிகழ்ச்சியானது மற்ற பிக் பாஸ் சீசன்களை விடவும் புதிதாக உருவாக்கவுள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் சாதாரண மக்களும் கலந்துகொள்ளும் வகையில், புது முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இதில் 1 அல்லது 2 சாதாரண மக்களும் கலந்துகொள்ளவுளர்களாம். இந்நிலையில், இது புதுவிதமாக இருக்கும் என மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.