படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் பாலையா மருத்துவமனையில் அனுமதி – படக்குழு வெளியிட்ட பதிவு
Nandamuri Balakrishna got injured and was hospitalised | தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிஅக்ர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் உருவாகி வரும் NBK111 படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் 65 வயதைக் கடந்தும் இளம் தலைமுறை நடிகர்களுக்கு போட்டியாக நடித்து வருகிறார். இதுவரை நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் 110 படங்கள் வெளியாகி உள்ளது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் அகாண்டா 2 தாண்டவம். கடந்த 2025-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 111-வது படத்திற்காக இயக்குநர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து இந்தப் படத்தின் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவிற்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.




படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் பாலையா மருத்துவமனையில் அனுமதி:
படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, காக்கிநாடாவில் ‘NBK 111’ திரைப்படத்தின் தீவிரமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கும்போது, நந்தமுரி பாலகிருஷ்ணா அவர்களுக்குத் தசைநார் பகுதியில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. விரைவாகவும் முழுமையாகவும் குணமடைவதை உறுதிசெய்யும் வகையில், மருத்துவக் குழுவின் அறிவுறுத்தலின்படி அவர் ஒரு சிறிய அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவுள்ளார்.
திரைப்படத்தின் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம் மற்றும் ஆர்வம் ஆகியவை ‘NBK 111’ படப்பிடிப்புத் தளத்தில் உள்ள அனைவரையும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன. இது ஒரு வழக்கமான மருத்துவ நடைமுறைதான் என்பதால், கவலைப்படத் தேவையில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துவதுடன், மீண்டும் படப்பிடிப்புத் தளத்திற்கு அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
Also Read… H Vinoth: விஜய் சார்தான் பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்யச் சொன்னார் – எச்.வினோத் ஓபன் டாக்!
NBK 111 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
During the filming of an intense action sequence for #NBK111 in Kakinada, Nandamuri Balakrishna Garu sustained a minor muscle tear.
As advised by the medical team, he will undergo a minor surgical procedure to ensure a swift and complete recovery.
His unwavering dedication,…
— Vriddhi Cinemas (@vriddhicinemas) July 21, 2026
Also Read… Hi Movie: சூர்யா படத்துடன் மோதும் கவினின் படம்.. வெளியான ரிலீஸ் அறிவிப்பு புரோமோ!