Hi Movie: சூர்யா படத்துடன் மோதும் கவினின் படம்.. வெளியான ரிலீஸ் அறிவிப்பு புரோமோ!
Kavin and Nayantharas Hi Movie Release Date: நடிகர் கவினின் நடிப்பில் தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படங்கள் உருவாகிவருகிறது. நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் நடித்திருக்கும் புது படம்தான் ஹாய். இப்படத்தின் ரிலீஸ் தேதி புரோமோவுடன் வெளியாகியுள்ளது. எப்போது என தெரியுமா?.
தமிழ் சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் கவின் ராஜ் (Kavin Raj). இவரின் நடிப்பில் சிறப்பாக பல படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக வெளியாகிய படம்தான் மாஸ்க் (Mask). இந்த படத்தை வெற்றிமாறன் (Vetri Maaran) தயாரித்திருந்த நிலையில்,கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் கவின் நடித்துவந்த புதிய திரைப்படம்தான் ஹாய் (Hi Movie). இந்த படத்தை இயக்குநர் விஷ்ணு எடவன் (Vishnu Edavan) இயக்க, நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இதில் கவின் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா (Nayanthara) நடித்துள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2025ம் ஆண்டு இறுதியிலே நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவந்தது. அந்த வகையில் இப்படத்திலிருந்து பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் என தொடர்ந்து அப்டேட்டுகளும் வெளியாகிவந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை புரோமோவுடன் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: ஜூலை 23-ம் தேதி வெளியாகும் ஜன நாயகன்… தளபதி விஜய் வெளியிட்ட மாஸ் வீடியோ
கவின் மற்றும் நயன்தாராவின் ஹாய் திரைப்பட ரிலீஸ் எப்போது:
இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் குடும்ப பொழுதுபோக்கு கதைக்களத்தில் உருவாக்கியுள்ள்ளது. இதில் நயன்தாரா, கவி, ராதிகா சரத்குமார், பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இதையும் படிங்க: அந்த பிரபலத்திற்குதான் எனக்கு பிடித்த நடிகர்கள் பட்டியலில் முதலிடம் – நடிகை சிம்ரன் ஓபன் டாக்
அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான புரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
நடிகர் கவின் வெளியிட்ட ஹாய் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு புரோமோ வீடியோ:
மயிலேறும் முருகன் துணை 🙏🏼
ஆகஸ்ட் 14 முதல் #Hi 🙂 @VishnuEdavan1 #Nayanthara @JenMartinmusic @ZeeStudios_ @Rowdy_Pictures @7screenstudio @SonyMusicSouth @proyuvraaj pic.twitter.com/sgXmQbnwM5
— Kavin (@Kavin_m_0431) July 20, 2026
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் ஹாய் :
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ளார்., தெலுஙங்கு இயக்குநர் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படமானது வரும் 2026ம் ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியாகவுள்ளது. அதே தேதியில் நயன்தாரா மற்றும் கவின் நடித்திருந்த ஹாய் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த இரு படங்களுக்கு இடையே போட்டிகள் நிலவும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.