AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜூலை 23-ம் தேதி வெளியாகும் ஜன நாயகன்… தளபதி விஜய் வெளியிட்ட மாஸ் வீடியோ

Actor Thalapathy Vijay released Jana Nayagan movie mass video | தளபதி விஜய் நடிப்பில் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் இன்னும் இரண்டு நாட்களில் உள்ள நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜூலை 23-ம் தேதி வெளியாகும் ஜன நாயகன்… தளபதி விஜய் வெளியிட்ட மாஸ் வீடியோ
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Jul 2026 17:33 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ரசிகர்கள் மிகவும் அதிகமாக எதிர்பார்த்து காத்து இருந்த படம் ஜன நாயகன். நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த ஜன நாயகன் படத்தின் மீது தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வந்த நடிகர் தளபதி விஜய் தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக உள்ளார். இவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே இனி படங்களில் நடிக்க போவதில்லை என்று உறுதியாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது தமிழ் நாட்டில் முதலமைச்சராகி உள்ள நிலையில் இனி அவர் நிச்சயமாக படத்தில் நடிக்க மாட்டார் என்பதும் உறுதி ஆகி உள்ளது.

இந்த நிலையில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டே முடிவடைந்த ஜன நாயகன் படம் சென்சார் பிரச்சனை காரணமாக தொடர்ந்து திரையரங்குகளில் வெளியாகாமல் இருந்து வந்தது. தற்போது தணிக்கை குழு ஜன நாயகன் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த சென்சார் சான்றிதழை பெற படக்குழு ஒரு பெரிய சட்ட போராட்டமே நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜன நாயகன் படத்தின் மாஸ் வீடியோவை வெளியிட்ட தளபதி விஜய்:

பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழ் சினிவில் தற்போது நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக உருவாகி உள்ள ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் வருகின்ற 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது உலகம் முழுவதும் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நடிகர் தளபதி விஜய் தனது சமூக வலைதளப் பக்கதில் படம் தொடர்பான மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… களம் காணும் ஜனநாயகன்.. விஜய் ரசிகர்கள் மத்தியில் எகிறும் டி-ஷர்ட் மவுசு!

நடிகர் தளபதி விஜய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Salman Khan: சல்மான் கானுக்கு என்ன ஆச்சி.. ஆளே எப்படி மாறிட்டாரு பாருங்க – வைரலாகும் வீடியோ!

Follow Us