தமிழ்நாட்டில் மட்டும் ஜன நாயகன் ப்ரீ புக்கிங்கிள் இத்தனை கோடிகள் வசூலா? வைரலாகும் தகவல்
Jana Nayagan Pre Release Sales In Tamil Nadu | தமிழ் சினிமாவில் இந்த வாரம் திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ள ஜன நாயகன் படத்தின் ப்ரீ புக்கிங் மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இயக்குநர் எச். வினோத் எழுதி இயக்கி உள்ள படம் ஜன நாயகன். தளபதி விஜய் இந்தப் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார். தமிழ் நாட்டின் முதலமைச்சராக நடிகர் தளபதி விஜய் தற்போது உள்ள நிலையில் இவரது நடிப்பில் இறுதியாக உருவான படம் என்ற பெருமையை இந்த ஜன நாயகன் படம் பெற்றுள்ளது. மேலும் தளபதி விஜயின் 69-வது படமாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பான் இந்திய அளவில் பல முன்னணி நடிகர்கள் நடித்து உள்ளனர். நடிகர் விஜய் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்து உள்ளார். மேலும் நடிகை பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து உள்ளார். இவர் விஜயுடன் இரண்டவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜூ முக்கியமான கதாபபத்திரத்தில் நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்த நிலையில் படம் பல தடைகளைத் தாண்டி வருகின்ற 23-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் முன்பதிவு தொடங்கிய நிலையில் படத்தின் ப்ரீ சேல்ஸ் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஜன நாயகன் ப்ரீ புக்கிங்கிள் இத்தனை கோடிகள் வசூலா?
அதன்படி ஜன நாயகன் படத்தின் முன்பதிவு உலகம் முழுவதும் தொடங்கி நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழ் நாட்டில் மட்டும் முதல் நாளிற்கான முன்பதிவில் தற்போது வரை சுமார் ரூபாய் 5 கோடிகளுக்கு அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மேலும், இப்படம் எல்லா இடங்களிலும் சிறப்பான முன்பதிவுகளைப் பெற்று வருகிறது. பல இடங்களில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. இன்று முதல் முழு அளவிலான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தளபதி விஜய்யின் பிரம்மாண்டமான நட்சத்திர அந்தஸ்து முழுமையாக வெளிப்படுகிறது. படம் முழுவதுமாக இணையத்தில் கசிந்திருந்தாலும் மற்றும் பலமுறை வெளியீடு தள்ளிவைக்கப்பட்டிருந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைக்க இப்படம் தயாராக உள்ளது.
Also Read… தேசிய விருதுகள் அறிவிப்பு – ராயன், மெய்யன் படங்களுக்கு விருது- விவரம் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#JanaNayagan – Terrific advance bookings for the film all over..💥 Day 1 shows are getting sold out in many places..⭐ Fullbfledged bookings are open from today..🤝
The massive stardom of #ThalapathyVijay is on full display..⭐ Even with the entire film getting leaked and… pic.twitter.com/iXLRyZwP9B
— Laxmi Kanth (@iammoviebuff007) July 20, 2026
Also Read… Toxic: யாஷின் டாக்ஸிக் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? – வைரலாகும் தகவல்!