ஜிவிஎம் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்… தொடங்கியது புதுப் படத்தின் ஷூட்டிங்!
Director Gautham Vasudev Menon new movie update | தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் அடுத்ததாக இயக்கும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கி உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். இவரது இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற படம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி தற்போது வரை வெளியீட்டில் சிக்கலாக உள்ளது. நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து உள்ள இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனே இயக்கி தயாரித்தும் இருந்தார். இந்தப் படத்திற்காக கடன்பெற்ற அவர் அந்த கடனை திருப்பி அளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் இந்தப் படத்தை வெளியிடவிடாமல் தொடர்ந்து வழக்கை தொடர்ந்தனர். மேலும் இந்தப் படம் தொடர்பான வழக்கு தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ் என்ற படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி நாயகனாக நடித்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். தொடர்ந்து சினிமாவில் இயக்குநராக மட்டும் இன்றி நடிகராகவும் பலப் படங்களில் நடித்து உள்ளார். தொடர்ந்து நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டிலும் பிசியாக வலம் வருகிறார்.




தொடங்கியது கௌதம் வாசுதேவ் மேனனின் புதுப் படத்தின் ஷூட்டிங்:
இந்த நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கவுள்ளவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனவே, இதில் யார் நடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
Also Read…
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Director #GauthamVasudevMenon‘s next film has officially gone on floors. The shooting is currently underway in Chennai. The cast of the film has not been revealed yet, so let’s wait and see who will be starring in this project.#GVM pic.twitter.com/JA6Sz4nAbv
— Movie Tamil (@_MovieTamil) July 16, 2026
Also Read… Dhyan Sreenivasan: இணையத்தில் பேசுபொருளாகியுள்ள இந்த தயன் ஸ்ரீனிவாசன் யார் தெரியுமா?