கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்தப் படம் இப்படிதான் இருக்குமாம் – என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Gautham Vasudev Menon: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் காதல் படங்களை இயக்குவதில் பிரபலம் ஆனவர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் அடுத்ததாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாக உள்ள படம் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ரொமாண்டிக் படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலம் ஆனவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இதுவரை நடிகர்கள் மாதவன், சூர்யா, கமல் ஹாசன், சிலம்பரசன், ஜீவா, தனுஷ் மற்றும் மம்முட்டி என பலர் நடித்துள்ளனர். அதன்படி இவர்களின் நடிப்பில் வெளியான படம் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டாம்னிக் அண்ட் தி லேடிஸ் பர்ஸ். இந்தப் படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் இவர் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து படங்களை இயக்கியது மட்டும் இன்றி தற்போது படங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




கௌதம் மேனன் இயக்கும் அடுத்தப் படம் இப்படிதான் இருக்குமாம்:
அதன்படி கௌதம் வாசுதேவ் மேனன் பேட்டியில் கூறியதாவது, நான் நீண்ட நாட்களாக ஒரு காதல் கதையை எழுதி வருகிறேன், அது கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, விரைவில் அதை படமாக்கப் போகிறேன். துருவ நட்சத்திரம் படத்தின் சிக்கல்கள் ஏறக்குறைய தீர்க்கப்பட்டுவிட்டன, விரைவில் அறிவிப்பு வெளியாகும். மேலும், ஒரு கன்னட சூப்பர் ஸ்டாருடன் பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்துள்ளது, அவரிடம் நான் ஒரு கதையின் கருவை விவரித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
Also Read… 2026-ம் ஆண்டில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் வரிசைக்கட்டும் படங்களின் லிஸ்ட் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
“I’m writing for a love story for a long time, it’s almost done & going to shoot very soon♥️. #DhruvaNatchathiram problem are almost sorted out & announcement soon⌛. Also having opportunity to work with Kannada Superstar, which i narrated idea😲🔥”
– #GVMpic.twitter.com/we32AJJLtl— AmuthaBharathi (@CinemaWithAB) January 5, 2026