AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IndvsZim : டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சு தேர்வு… இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள்

T20 World Cup : டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு  எதிரான போட்டியில் டாஸ் வென்று ஜிம்பாப்வே பந்து வீச்சு  தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்யவுள்ளது. சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் களமிறங்கவிருக்கிறார்.

IndvsZim : டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சு தேர்வு… இந்திய அணியில் 2 முக்கிய மாற்றங்கள்
சஞ்சு சாம்சன் - அக்சர் படேல்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 26 Feb 2026 19:42 PM IST

டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு  எதிரான போட்டியில் டாஸ் வென்று ஜிம்பாப்வே பந்து வீச்சு  தேர்வு செய்துள்ளது. டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பிப்ரவரி 26, 2026 அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. இந்த முக்கிய போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.  அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இந்திய அணிக்கு இந்த போட்டி கட்டாய வெற்றி ஆட்டமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்

இந்த போட்டிக்காக இந்திய அணி தனது பிளேயிங் லெவனில் 2 முக்கிய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த போட்டியில் ரிங்கு சிங்கிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வாஷிங்டன் சுந்தருக்கு பதிலா அக்சர் படேல் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஜிம்பாப்வே அணியலும் கிரேமருக்கு பதிலாக டினோடெண்டா மபோசா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க : ஐசிசி டி20 தரவரிசை – மோசமான ஃபார்மிலும் முதலிடத்தில் அபிஷேக் சர்மா, டாப் 10ல் பும்ரா

பிசிசிஐயின் எக்ஸ் பதிவு

 

இந்த தொடரில் தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் திலக் வர்மா எதிர்பார்த்த அளவுக்கு ரன்கள் எடுக்காதது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. குறிப்பாக 3 போட்டிகளில் டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். மேலும் 4 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும் 3வது இடத்தில் விளையாடிய திலக் வர்மா 107 ரன்கள் எடுத்திருந்தாலும், குறைந்த ஸ்டிரைக் ரேட் காரணமாக விமர்சனத்துக்குள்ளானார்.

இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் அபிஷேக் சர்மா தொடக்க வீரராக களமிறங்கவுள்ளார். அவரைத் தொடர்ந்து 3வது இடத்தில் இஷான் கிஷன் களமிறங்கவுள்ளார். கடந்த 2 போட்டிகளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத வாஷிங்டனுக்கு பதிலாக அனுபவம் வாய்ந்த அக்சர் படேல் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிக்க : ரோஹித் சர்மாவின் ஆல் டைம் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஹர்திக் பாண்ட்யா!

இந்த நிலையில் டாஸ் நிகழ்வின் போது, ஜிம்பாப்வேவை எதிர்கொள்ள இந்தியா முழுமையாக தயாராக உள்ளது. அணியில் மனநிலை மிகவும் அழுத்தங்கள் இல்லாமல் அமைதியாக உள்ளது. கடந்த போட்டியை மறந்து பயமின்றி ஜிம்பாப்வேவை எதிர்கொள்ள வேண்டும். வெற்றியில் மட்டுமில்லாமல் தோல்வியிலும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று பேசினார்.

Follow Us