AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: முக்கியமான 4வது நாள்.. மழையால் இந்தியா – இலங்கை போட்டி பாதிக்குமா?

IND vs SL 1st Test 4th Day Weather Update: இந்தியா இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் சுமார் 250 ரன்கள் எடுத்து, சொந்த அணிக்கு 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கும். இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. ஆனால் மழை ஆட்டத்தைக் கெடுக்கக்கூடும். நாளை அதாவது 2026 ஆகஸ்ட் 18ம் தேதி மழையால் ஆட்டம் தடைபடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, ஆட்டம் சமனில் முடிவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.

IND vs SL: முக்கியமான 4வது நாள்.. மழையால் இந்தியா – இலங்கை போட்டி பாதிக்குமா?
வானிலை நிலவரம்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Aug 2026 22:23 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு (IND vs SL) இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 3 நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில், நாளை அதாவது 2026 ஆகஸ்ட் 18ம் தேதி நான்காவது நாளாகத் தொடர்கிறது. இதுவரை நடந்த 3 நாட்களுமே மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. 2026 ஆகஸ்ட் 17ம் தேதியான இன்று, மழையின் காரணமாக இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் நிறுத்தப்பட்டதால், அன்றைய ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் முன்னதாகவே கைவிடப்பட்டது. இந்தியா (Indian Cricket Team) தற்போது வலுவான நிலையில் இருந்தாலும், காலியில் நிலவும் வானிலை இந்திய அணியின் கவலைகளை அதிகரித்துள்ளது. அந்தவகையில், போட்டியின் 4வது நாள் வானிலை எப்படி இருக்கும் மற்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

ALSO READ: டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகள்.. சிறப்பு சாதனை பட்டியலில் ஜடேஜா..!

முதல் இன்னிங்ஸில் இந்தியா 462 ரன்கள் எடுத்தது. இதில் தேவ்தத் படிக்கல் வரலாற்றுச் சிறப்புமிக்க 167 ரன்களும், கே.எல். ராகுல் 82 ரன்களும், துருவ் ஜூரல் 51 ரன்களும் எடுத்தனர். மூன்றாவது நாளில், டிக்வெல்லாவும் சோனல் தினுஷாவும் இணைந்து சதக்கூட்டணி அமைத்து, இலங்கையை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டனர். இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்தியா 178 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்தியா இப்போது இரண்டாவது இன்னிங்ஸில் சுமார் 250 ரன்கள் எடுத்து, சொந்த அணிக்கு 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கும். இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. ஆனால் மழை ஆட்டத்தைக் கெடுக்கக்கூடும். நாளை அதாவது 2026 ஆகஸ்ட் 18ம் தேதி மழையால் ஆட்டம் தடைபடும் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, ஆட்டம் சமனில் முடிவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். எனவே, நான்காம் நாள் ஆட்டத்தின் பெரும்பகுதியை மழை பாழாக்குவதை இந்திய அணி விரும்பாது.

காலியில் வானிலை எப்படி இருக்கும் ?


நாளை அதாவது 2026 ஆகஸ்ட் 18ம் தேதி காலியில் பெரும்பாலான நேரம் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் அமர்வில் மழை பெய்ய 50 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்புள்ளது. இரண்டாம் அமர்வில் மழைக்கான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், மூன்றாம் அமர்வில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.

ALSO READ: மழையால் அடிக்கடி தடை.. இந்தியா – இலங்கை போட்டியில் வெற்றி யாருக்கு..? ஐசிசி விதிகள் கூறுவது என்ன?

போட்டியின் நேரடி ஒளிபரப்பு எங்கே?

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம், சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பப்படும். சோனி லிவ் ஆப் மற்றும் இணையதளத்திலும் நேரலை ஒளிபரப்பை காணலாம்.

Follow Us