AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகள்.. சிறப்பு சாதனை பட்டியலில் ஜடேஜா..!

Ravindra Jadeja Record: முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் 5248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் இயன் போத்தம் 5200 ரன்கள் மற்றும் 383 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், டேனியல் வெட்டோரி 4531 ரன்கள் மற்றும் 362 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தற்போது ரவீந்திர ஜடேஜா 4108 ரன்கள் மற்றும் 350 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

IND vs SL: டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகள்.. சிறப்பு சாதனை பட்டியலில் ஜடேஜா..!
ரவீந்திர ஜடேஜாImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Aug 2026 18:43 PM IST

இந்திய அணி (Indian Cricket Team) நட்சத்திர ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja), இலங்கைக்கு எதிரான காலி டெஸ்ட் போட்டியில் ஒரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இலங்கையின் கேஷரா நுவந்தாவை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம், ஜடேஜா டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களுக்கு மேலும், 350 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்த வீரர் என்ற சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4000 ரன்களுக்கு மேலும், 350 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்த உலகின் நான்காவது ஆல்-ரவுண்டராகவும், இரண்டாவது இந்திய ஆல்-ரவுண்டராகவும் மாறியுள்ளார். இதற்கு முன்னர், இயன் போத்தம், கபில் தேவ் மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

ALSO READ: இலங்கையிடம் முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றால்.. இந்திய அணி பைனலுக்கு தகுதி பெறுமா..?

முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் 5248 ரன்கள் மற்றும் 434 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் இயன் போத்தம் 5200 ரன்கள் மற்றும் 383 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், டேனியல் வெட்டோரி 4531 ரன்கள் மற்றும் 362 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். தற்போது ரவீந்திர ஜடேஜா 4108 ரன்கள் மற்றும் 350 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா வரும் காலங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட்டால், இந்த சாதனை பட்டியலில் முன்னேறலாம். ஏனெனில், மேலே குறிப்பிடப்பட்ட 3 வீரர்களும் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். இருப்பினும், ரவீந்திர ஜடேஜா தற்போது வரை விளையாடி வருகிறார்.

எதிர்பாராத விதமாக ஜடேஜாவுக்கு கிடைத்த விக்கெட்:

ரவீந்திர ஜடேஜா எதிர்பாராத விதமாக தனது 350-வது விக்கெட்டைப் பெற்றார். 67-வது ஓவரில், ஜடேஜா வீசிய பந்து சுழல, கேஷரா நுவந்தா அதை பலமாக அடித்தார். சில்லி பாயிண்டில் நின்றுகொண்டிருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள காற்றில் குதித்தார். ஆனால், பந்து அவரது வலது காலில் பட்டு காற்றில் பறந்தது. கவரில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கேப்டன் சுப்மன் கில் ஓடிவந்து அந்த கேட்சைப் பிடித்தார். இந்த விக்கெட்டுடன், ரவீந்திர ஜடேஜாவின் 350-வது விக்கெட் நிறைவடைந்துள்ளது.

ALSO READ: 90க்கே 5 விக்கெட்டுகள் இழப்பு.. 284 ரன்களை கொண்டு வந்த தினுஷா – டிக்வாலா ஜோடி..!

5வது இந்திய பேட்ஸ்மேன்:

இந்தியாவுக்காக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆவார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகளுடன் இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ரவிச்சந்திரன் அஸ்வின் 537 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்திலும், கபில் தேவ் 434 விக்கெட்டுகளுடன் 3ம் இடத்திலும், ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். உலகில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஜடேஜா ஆகியுள்ளார். ஜடேஜாவுக்கு முன்னதாக, ரங்கனா ஹெரத் மற்றும் டேனியல் வெட்டோரி ஆகியோர் இந்த சாதனையை படைத்திருந்தனர்.

Follow Us