IND vs SL: 90க்கே 5 விக்கெட்டுகள் இழப்பு.. 284 ரன்களை கொண்டு வந்த தினுஷா – டிக்வாலா ஜோடி..!
SL vs IND 1st Test 3rd Day Highlights: இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் சிறப்பாகத் தொடங்கவில்லை. இன்னிங்ஸை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தனர். ஆனால், சோனல் தினுஷாவும் நிரோஷன் டிக்வெல்லாவும் 6வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் என்ற ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு (IND vs SL) இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் போட்டி அவ்வபோது தடைபட்ட போதிலும், இப்போட்டி ஒரு முடிவை எட்டும் என தெரிகிறது. ஏனெனில், மூன்றாவது நாள் ஆட்டம் முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்களுக்குள் ஆல் அவுட்டானது. முன்னதாக, முதல் இன்னிங்ஸில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 462 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, இந்திய அணி (Indian Cricket Team) 178 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி இந்த முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் நாளை அதாவது 2026 ஆகஸ்ட் 18ம் தேதி விளையாடும். காலி ஸ்டேடியத்தின் பிட்ச் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக உள்ளது. எனவே, இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா கூடுதலாக 200 ரன்கள் எடுத்தாலும், போட்டி இந்தியா வெற்றியை நோக்கி பயணிக்கலாம்.
ALSO READ: காலியில் மீண்டும் மழை இந்திய அணிக்குத் தடையாக இருக்குமா? 3ம் நாளில் வானிலை எப்படி?




இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ்:
Rain brings an end to Day 3 and that will be stumps!#TeamIndia lead by 178 runs.
Scorecard ▶️ https://t.co/M9LVyCAp8y#SLvIND https://t.co/cDy57I8vFD
— BCCI (@BCCI) August 17, 2026
இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் சிறப்பாகத் தொடங்கவில்லை. இன்னிங்ஸை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே இலங்கை அணி 5 விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தனர். ஆனால், சோனல் தினுஷாவும் நிரோஷன் டிக்வெல்லாவும் 6வது விக்கெட்டுக்கு 146 ரன்கள் என்ற ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். கே.எல். ராகுலின் கேட்சை நிரோஷன் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். இந்த இருவரின் இன்னிங்ஸால் இலங்கை அணி நல்ல நிலையில் இருந்தது. நிரோஷன் டிக்வெல்லா 115 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதே சமயம், சோனல் தினுஷா 168 பந்துகளை எதிர்கொண்டு 100 ரன்கள் எடுத்தார். இந்த இருவரைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனாலும் பெரிய ஸ்கோரை எடுக்க முடியவில்லை.
ALSO READ: தூரமாய் சென்ற பந்து.. துரத்தி தாவி பிடித்த கில்.. இணையத்தில் வட்டமடிக்கும் வீடியோ!
இந்திய அணிக்காக, சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் சிறப்பாகச் செயல்பட்டார். இலங்கை அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் 21.4 ஓவர்கள் பந்து வீசி 76 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 21 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதே சமயம், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.