AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: தூரமாய் சென்ற பந்து.. துரத்தி தாவி பிடித்த கில்.. இணையத்தில் வட்டமடிக்கும் வீடியோ!

Shubman Gill Brilliant Catch: சுப்மன் கில் இந்த கேட்சைப் பிடித்தபோது, ​​வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர், கில்லைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பந்து சுப்மன் கில்லின் கைக்கு எட்டாத தூரத்தில் இருந்தபோதிலும், அவர் நம்பமுடியாத அளவிற்கு தாவி அந்த கேட்சைப் பிடித்ததாக கூறினார்.

IND vs SL: தூரமாய் சென்ற பந்து.. துரத்தி தாவி பிடித்த கில்.. இணையத்தில் வட்டமடிக்கும் வீடியோ!
சுப்மன் கில் பிடித்த கேட்ச்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Aug 2026 17:01 PM IST

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டன் சுப்மன் கில் பிடித்த கேட்ச் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. காலி டெஸ்டின் 3வது நாளான இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 17ம் தேதி இந்திய அணி 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்ததாக தனது முதல் இன்னிங்ஸின்போது இலங்கை அணி (Sri Lanka Cricket Team) பேட்டிங் செய்ய வந்தபோது, ​​சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதற்கிடையில், மூன்றாவது நாளின் முதல் செஷனில், கேப்டன் சுப்மன் கில் (Shubman Gill), கமிண்டு மெண்டிஸின் பந்தை சூப்பர்மேன் போல தாவி பிடித்தார்.

இலங்கை அணியின் இன்னிங்ஸின் 17வது ஓவரில், குல்தீப் யாதவ் பந்துவீச வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அவருக்கு முன்னால் கமிந்து மெண்டிஸ் பந்தை கவர் திசையில் தள்ள முயன்றார். ஆனால், ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த சுப்மன் கில், தனது இடதுபுறம் பாய்ந்து ஒற்றைக் கையால் கேட்சைப் பிடித்தார். இவை அனைத்தும் மிக விரைவாக நடந்ததால், மெண்டிஸ் முற்றிலும் நிலைகுலைந்து போனார்.

ALSO READ: கே.எல்.ராகுல் அடித்த பலமான ஷாட்.. இலங்கை பீல்டர் தலையில் பட்ட சோகம்.. கதிகலங்கும் வீடியோ!

சுப்மன் கில் பிடித்த கேட்ச்:


சுப்மன் கில் இந்த அற்புதமான கேட்சை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினார். அவர் பிடித்த கேட்சின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கில் அந்த கேட்சைப் பிடித்தபோது, ​​இலங்கை அணி தனது 4வது விக்கெட்டை வெறும் 59 ரன்களுக்கு இழந்திருந்தது. அதே நேரத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 462 ரன்கள் எடுத்திருந்தது.

சுப்மன் கில் இந்த கேட்சைப் பிடித்தபோது, ​​வர்ணனை செய்து கொண்டிருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர், கில்லைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பந்து சுப்மன் கில்லின் கைக்கு எட்டாத தூரத்தில் இருந்தபோதிலும், அவர் நம்பமுடியாத அளவிற்கு தாவி அந்த கேட்சைப் பிடித்ததாக கூறினார். இது உண்மையிலேயே கில்லின் மிக அற்புதமான கேட்சுகளில் ஒன்றாகும்.

ALSO READ: காலியில் மீண்டும் மழை இந்திய அணிக்குத் தடையாக இருக்குமா? 3ம் நாளில் வானிலை எப்படி?

விளையாட்டு வர்ணனையாளரும் தொகுப்பாளருமான இயன் பிஷப்பும் கில்லின் கேட்சைக் கண்டு பிரமித்துப்போனார். அந்த கேட்ச் உண்மையிலேயே அற்புதமானது என்று கூறி, இந்திய கேப்டன் கில் பாராட்டினார். சமூக ஊடகங்களில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் கில்லின் இந்த அற்புதமான கேட்சைப் பாராட்டி வருகின்றனர். தற்போது கில் பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Follow Us